தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஆப்பு..! 3, 5 ஆவது பாய்ண்ட் நோட் பண்ணீங்களா ..?

By ezhil mozhiFirst Published Jan 29, 2019, 8:51 PM IST
Highlights

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர தவிர தற்காலிக ஆசிரியர்களும் போராட்டம் செய்யும் சூழல் தற்போது தமிழகத்தில் உள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர தவிர தற்காலிக ஆசிரியர்களும் போராட்டம் செய்யும் சூழல் தற்போது தமிழகத்தில் உள்ளது.
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செய்து வரும் போராட்டம் ஒரு பக்கம் இருக்க, எவ்வெளவு சொல்லியும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர்களை  நியமனம் செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஆசிரியர்களை நியமனமும் செய்தது அரசு.

இந்த நிலையில் போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்ததை அடுத்து சில ஆசிரிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் பெரும்பாலோனோர் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தான் உண்மை என்கிறது ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பக்கம். இந்த நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் சரியான முறையில் நியமனம் இல்லை என போராட்டத்தில் குதித்தனர். 

அதையும் மீறி நியமனம் செய்யப்பட்டதில் ஒரு விஷயம் என்ன வென்றால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் நியமன படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புக்கள் இதோ..! 

1 .நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்  28.01.19 காலை 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். 

2 .இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. இந்த நியமன ஆணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பில் எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படாது.

3 .அரசால் அறிவிக்கப்படும் போது உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் 

4 .பணியேற்க வேண்டிய நாள் முதல் தொகுப்பூதியம் வழங்கப்படும். 

5 .தொகுப்பூதியம் ரூ.10000 அரசால் நிதி  ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே பெற்று வழங்கப்படும்.

இவ்வாறு தற்காலிக ஆணை  பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக்கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் வேலைக்கு செல்லும் இந்த சமயத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், கடும் குழப்பத்தில் உள்ளனர் தற்காலிக ஆசிரியர்கள். 

இவர்கள் ஒரு பக்கம் இருக்க நாங்கள் போராட்டத்தில் தான் இருக்கோம். பள்ளிக்கு யாரும் செல்லவில்லை என இன்னொரு பக்கம் புயலை கிளப்பிவிட்டு உள்ளனர் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்.

இதனை எல்லாம் பார்க்கும் போது போராட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என அனைவருமே பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்து அமைச்சர் செங்கோட்டையன் அசத்தி வந்த நிலையில், ஏதோ கண்ணு பட்ட மாதிரி ஆகிவிட்டதே என மக்கள் புலம்புவதை கேட்க முடிகிறது.
 

click me!