ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயாராக உள்ளேன், ஆனால் எனது கையெழுத்தை ஏற்க ஈபிஎஸ் மறுக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சமாதானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

09:44 PM (IST) Feb 03
தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் இருந்ததால், மாணவர் ஒருவர் பதட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
08:29 PM (IST) Feb 03
மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
07:55 PM (IST) Feb 03
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எடுத்த ஆக்சன் இன்று தமிழக பாஜகவினரை சந்திக்க வைத்துள்ளது.
06:49 PM (IST) Feb 03
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ (Leo) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
05:50 PM (IST) Feb 03
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரண்டு அணிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றது.
04:45 PM (IST) Feb 03
ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
04:25 PM (IST) Feb 03
சவுத் இந்தியன் வங்கி ப்ரோபேஷனரி கிளார்க் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கிளார்க் பணிகளுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
03:31 PM (IST) Feb 03
நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் அசத்தலான வேலைவாய்ப்பு பற்றி இங்கு காண்போம்.
03:01 PM (IST) Feb 03
நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு விமானத்தில் சென்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
02:15 PM (IST) Feb 03
ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:49 AM (IST) Feb 03
சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி போன்ற காலத்தால் அழியாத காவிய படைப்புகளைக் கொடுத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...
10:20 AM (IST) Feb 03
இன்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க பாஜக தலைவர் அண்ணாமலை புறப்பட்டார்.
09:43 AM (IST) Feb 03
ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக பாஜக புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்ய பிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
09:38 AM (IST) Feb 03
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ கதிருக்கு தந்தையாக நடித்த நடிகர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். மேலும் படிக்க
09:00 AM (IST) Feb 03
அதிமுக இடைக்கால பொதுச்செயளாலராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
08:58 AM (IST) Feb 03
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்று திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்துள்ளார்.
08:43 AM (IST) Feb 03
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. அண்ணா சாலையில் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறுகிறது.
08:42 AM (IST) Feb 03
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:30 AM (IST) Feb 03
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:49 AM (IST) Feb 03
அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி 2026 வரை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் நான் கையொப்பமிடுவேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலா உறுதியாக சந்திப்பேன்.
07:49 AM (IST) Feb 03
வேலூரில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரயில் மூலம் காட்பாடிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார். பின்னர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு 7 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார்.