Published : Aug 06, 2022, 07:16 AM ISTUpdated : Aug 06, 2022, 10:44 PM IST

Tamil News live : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி !!

சுருக்கம்

இந்திய நாட்டின் 14- வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.

Tamil News live :  குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி !!

10:44 PM (IST) Aug 06

அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில்  9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குளநீர் வடிகாலை கோவை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி மேயர்,ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க

09:25 PM (IST) Aug 06

அதிமுக அலுவலகத்துக்கு வருகிறாரா சசிகலா ?

தமிழகம் முழுவதும் அடிக்கடி சுற்றுப்பயணம், ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருந்தார் சசிகலா. சமீபத்தில் அடிக்கடி தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களை சந்தித்து வருகிறார் சசிகலா.

மேலும் படிக்க

08:51 PM (IST) Aug 06

நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவரானார் ஜெகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க

08:50 PM (IST) Aug 06

முதல்வர் மு.க ஸ்டாலினை சீண்டிய வானதி சீனிவாசன்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தனியாா் கல்லூரியில் பாஜக மகளிரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

மேலும் படிக்க

05:12 PM (IST) Aug 06

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் வாக்களிக்கவில்லை
 

04:57 PM (IST) Aug 06

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

காமன்வெல்த் 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில் 8.11 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்திய வீரர் அவினாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் கிடைத்துள்ளது

04:11 PM (IST) Aug 06

அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடைபெற்ற ஐ.டி ரெய்டு.. கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு..

அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

03:08 PM (IST) Aug 06

விக்ரம் தந்த விஸ்வரூப வெற்றி... சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய கமல்! - அதுவும் இத்தனை கோடியா?

பட வாய்ப்பு குவிந்து வருவதனால், நடிகர் கமல் தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாக சினிமா பத்திரிக்கை ஒன்றின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் மூலம் தெரியவந்திருக்கிறது. அதன்படி நடிகர் கமல் தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்துக்காக ரூ.130 கோடி சம்பளமாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

03:05 PM (IST) Aug 06

அலர்ட் மக்களே..!! இன்று 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

நீலகிரி, கோவை‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:43 PM (IST) Aug 06

வான்டடா வீடியோகால் செய்து ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண்.. 2 செகண்ட் பார்த்த பாவத்துக்கு 7 லட்சம் அழுத தொழிலதிபர்

வீடியோகாலில் வந்து பெண் நிர்வாணமாக பேசிய நிலையில், அவருடன் பேசிய இளைஞரிடம் 7.5 லட்சம் ரூபாய் மிரட்டி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோ கால் ச*** நூதன மோசடி என்பது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க


 

02:11 PM (IST) Aug 06

வாய், கை, கால்களில் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 82 வயது மூதாட்டி.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவையில் வாய், கை, கால்களை டேப்பினால் சுற்றப்பட்டு 82 மூதாட்டி கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

01:29 PM (IST) Aug 06

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினவிழாவில் நல்லகண்ணுக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின் கவுரவிக்கிறார்.

12:55 PM (IST) Aug 06

மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்... ‘தி கிரே மேன் 2’-வில் நடிப்பதை உறுதி செய்தார்

தி கிரே மேன் படத்தின் 2-ம் பாகத்தில் தானும் நடிக்க உள்ளதை நடிகர் தனுஷ் உறுதி செய்துள்ளார். இதைப்பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்கள் நடிகர் தனுஷுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்து வருகின்றனர். முதல் பாகத்தைப் போல் 5 நிமிடம் மட்டும் வந்து செல்லாமல் படம் முழுக்க வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் படிக்க

12:16 PM (IST) Aug 06

வகுப்பறையில் மாணவன், மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

கடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவ- மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

12:09 PM (IST) Aug 06

சூப்பர் அறிவிப்பு !! விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்கு உயர்வு .. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தற்போது இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:25 AM (IST) Aug 06

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனா தொற்று

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார். 

11:19 AM (IST) Aug 06

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. ஆஜராகப்போகும் மருது அழகுராஜ்.. புதிய தகவல் வெளியாக வாய்ப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜராகவுள்ளார்.

மேலும் படிக்க

11:06 AM (IST) Aug 06

களத்திலேயே துடிதுடித்து இறந்த கபடி வீரர் விமல்ராஜ்! குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் RK சுரேஷ்

கபடி வீரர் விமல்ராஜ் களத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வைரலாக பரவி காண்போரை கண்கலங்க செய்தது. தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் படிக்க

 

10:16 AM (IST) Aug 06

குடியரசு துணைத் தலைவர்.. வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.

09:40 AM (IST) Aug 06

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,75,000 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 1,65,000 கனஅடியாக இருந்தது. 

09:33 AM (IST) Aug 06

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு! ஆஜராகிறார் மருது அழகுராஜ்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று  மருது அழகுராஜ் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.  சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து வடக்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான ததனிப்படை முன் ஆஜராகிறார். 

09:26 AM (IST) Aug 06

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளன

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் தெதரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காததால், ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

09:09 AM (IST) Aug 06

சினிமாவை மிஞ்சிய விபத்து! வாக்கிங் சென்றவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி

புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஜெகதீப் தங்கம் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.  

மேலும் படிக்க

09:07 AM (IST) Aug 06

புதிய துணை குடியரசு தலைவர் யார்? பாஜக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துமா எதிர்க்கட்சிகள்.. இன்று வாக்குப்பதிவு

புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஜெகதீப் தங்கம் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.  

மேலும் படிக்க

08:59 AM (IST) Aug 06

இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். 

08:41 AM (IST) Aug 06

விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்த விஜே மகேஸ்வரி

விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்த நடிகை விஜே மகேஸ்வரி, தான் விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க

07:57 AM (IST) Aug 06

சலசலப்புக்கு மத்தியிலும்... வெற்றிமாறன் படத்துக்காக சேர்ந்து பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் - அறிவு கூட்டணி

என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணனும், தெருக்குரல் அறிவும் தற்போது ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றி உள்ளனர். வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’. இப்படத்தில் இடம்பெறும் ‘கீச்சு... கீச்சு’ என்கிற பாடலுக்காக தான் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். தெருக்குரல் அறிவு அப்பாடலுக்கான வரிகளை எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். மேலும் படிக்க

07:48 AM (IST) Aug 06

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை.. சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

07:21 AM (IST) Aug 06

ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஆடி மாதம் தொடங்கியது முதல் பல கோவில்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் ஆடிமாத திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

07:20 AM (IST) Aug 06

ராமேஸ்வரம் கோயிலில் அள்ள அள்ள பணம்.. எவ்வளவு தெரியுமா?

சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி கோவில். இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

மேலும் படிக்க

07:20 AM (IST) Aug 06

பிங்க் நிறமாக மாறுகிறது மகளிர் பேருந்துகள்.. பொதுமக்கள் குஷி.. தொடங்கி வைக்கும் உதயநிதி !

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த திட்டங்களில் முதன்மையானது மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் ஆகும்.  கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது  திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து மகளிருக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க

07:19 AM (IST) Aug 06

Horoscope: மேஷம், துலாம் ராசிகளுக்கு சோதனை வருதாம்..! எச்சரிக்கை அவசியம்..இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு

Horoscope Today- Indriya Rasipalan 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும் உள்ள பலன்களை நாம் தெரிந்து வைத்து கொள்வோம். அதன்படி, இன்று யாருக்கு மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க

07:18 AM (IST) Aug 06

அந்த பெரியார் சிலையை பார்க்கும் போது பெருமாளை வழிபடுவது போன்று எனக்கு தோன்றும்.. டிடிவி.தினகரன் அதகளம்.!

நான் கடவுளுக்கு எதிரி அல்ல. கடவுள் பெயரைக் கூறி ஏமாற்றுபவர்களுக்கே எதிரி என்று பெரியார் கூறினார். அவரின் கடவுள் மறுப்பு கொள்கை தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளிலும் உடன்பாடு உள்ளது. ஶ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை பார்க்கும்போது அந்த சிலை மனதிற்குள் பெருமாளை வழிபடுவது போன்றே எனக்கு தோன்றும். 

மேலும் படிக்க