ராமேஸ்வரம் கோயிலில் அள்ள அள்ள பணம்.. எவ்வளவு தெரியுமா?

சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி கோவில். இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

Rameswaram ramanathaswamy temple Hundi collection

சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசாமி கோவில். இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக ஆடி அமாவாசை அன்று, பெற்றோர் இல்லாதவர்கள் ராமநாதசாமி கோவிலுக்கு வந்திருந்து தர்ப்பணம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ராமநாதசாமி கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, கோவில் நடை பக்தர்களுக்கு திறக்கப்பட்டு, பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Rameswaram ramanathaswamy temple Hundi collection

சிவாலயங்களில் புண்ணியதலமாக கருதப்படும் இந்தக் கோயிலில், நடப்பு ஆடி மாதத்தில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்களின் காணிக்கை செலுத்துதலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதசாமி கோவிலில் உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது. துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 

Rameswaram ramanathaswamy temple Hundi collection

இதில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ரூபாய் 1 கோடியே 31 ஆயிரத்து 878 ரொக்கம்,  88.500 கிராம் தங்கம், 2 கிலோ 310 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios