கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று ஏசியாநெட் நியூஸுடன் ஜன் கி பாத் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது. முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 89-97 இடங்களும், பாஜகவுக்கு 98-109 இடங்களும், ஜேடி(எஸ்) கட்சிக்கு 25-29 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

09:09 PM (IST) Apr 14
கடலோர கர்நாடகத்தில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 19 இடங்களில் 16 இடங்கள் பாஜகவுக்கும் 3 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஜேடி(எஸ்) கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
09:08 PM (IST) Apr 14
மும்பை கர்நாடகத்தில் மொத்தமுள்ள 50 இடங்களில் பாஜகவுக்கு 31 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேடி(எஸ்) கட்சிக்கு இங்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
09:08 PM (IST) Apr 14
மத்திய கர்நாடகாவில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 13 இடங்களையும் காங்கிரஸ் 12 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய கர்நாடகாவில் பாஜகவுக்கு 13 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
09:08 PM (IST) Apr 14
பெங்களூரில் மொத்தமுள்ள 32 இடங்களில் பாஜக 15 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் ஜேடி(எஸ்) கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
09:07 PM (IST) Apr 14
ஹைதராபாத் கர்நாடகாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 16 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் 23 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
06:50 PM (IST) Apr 14
பழைய மைசூரு பகுதிகளில் உள்ள மொத்தம் 57 இடங்களில் காங்கிரஸ் 23 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 12 இடங்களும், காங்கிரஸுக்கு 23 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜேடி(எஸ்) கட்சிக்கு 22 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
03:07 PM (IST) Apr 14
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் பதிண்டா இராணுவ முகாமில் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
02:38 PM (IST) Apr 14
எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, மணிகண்டா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
01:32 PM (IST) Apr 14
பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ருத்ரன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:00 PM (IST) Apr 14
திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
11:45 AM (IST) Apr 14
அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் படிக்க
11:02 AM (IST) Apr 14
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் சாகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:34 AM (IST) Apr 14
திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
10:32 AM (IST) Apr 14
ரஃபேர் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்சை நான் வாங்கினேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
10:03 AM (IST) Apr 14
தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது. வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:59 AM (IST) Apr 14
பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று அசாமில் நடைபெறும் பிஹு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் படிக்க
09:15 AM (IST) Apr 14
சினிமா பாணியில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
08:35 AM (IST) Apr 14
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர் யோகேஷ்குமார் உடல் மதுரை வந்தடைந்தது!
07:59 AM (IST) Apr 14
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
07:58 AM (IST) Apr 14
ஜூசில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
07:44 AM (IST) Apr 14
சூரியன் இடம்பெயர்வதனால் 4 ராசிகளுக்கு குபேர யோகம் ஏற்படுகிறது. இந்த குபேர யோகத்தினால் பணம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சுபம் பெற உள்ள ராசிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்
07:44 AM (IST) Apr 14
திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலை இன்று காலை வெளியிட இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
07:43 AM (IST) Apr 14
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என அழைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.