கேளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அணைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயரில் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

02:45 PM (IST) Apr 13
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மேலும் ஒரு மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
02:07 PM (IST) Apr 13
பதிண்டா ராணுவ நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை மாலை மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற போர்வையிலும் பார்க்கப்படுகிறது.
02:06 PM (IST) Apr 13
பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இது ராணுவ முகாமில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட சதி என்று ராணுவ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
01:56 PM (IST) Apr 13
விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் அலுவலகம் வாங்கியதன் சுவாரஸ்ய பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:28 PM (IST) Apr 13
பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து ரூ.8.50 கோடி நிதியுதவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
12:32 PM (IST) Apr 13
அண்ணாமலை மீது புகார் கூறி மேலும் ஒரு பாஜக மாநில நிர்வாகி விலகியுள்ளார். கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது - மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு குற்றச்சாட்டியுள்ளார்.
12:27 PM (IST) Apr 13
தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
12:15 PM (IST) Apr 13
லேடி சூப்பர்ஸ்டாரின் மகளாக நடிக்க வருமாறு ஆடிசனுக்கு அழைத்து தன்னிடம் அத்துமீறியதாக நடிகை மாளவிகா ஸ்ரீநாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
12:01 PM (IST) Apr 13
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக, நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:27 AM (IST) Apr 13
கலாஷேத்ரா விவகாரத்தில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அபிராமியை நடிகை குட்டி பத்மினி விமர்சித்து கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு அபிராமி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க
10:14 AM (IST) Apr 13
தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. அக்ஷய திருதி நெருங்குவதால் வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
09:36 AM (IST) Apr 13
அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என மாவட்டந்தோறும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
08:18 AM (IST) Apr 13
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் தேனி மாவட்டம் மூணாண்பட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் ஆகிய 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:14 AM (IST) Apr 13
அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
08:06 AM (IST) Apr 13
டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.