கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை என்றும், இனி எந்த தேர்தல் வந்தாலும் கோவையில் நாம் நிறுத்தும் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

10:22 PM (IST) Apr 04
நேட்டோ அமைப்பில் 31வது நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. இது உலக நாடுகளிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
09:50 PM (IST) Apr 04
சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட குயினோவாவை உட்கொண்டால் சக்கரை அளவை குறைக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
08:45 PM (IST) Apr 04
நம்முடைய ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு.
08:19 PM (IST) Apr 04
அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளநிலையில் ராகுல் காந்தி வசிப்பதற்கு அயோத்தி கோவிலில் இடம் தயார் என்று சாமியார்கள் கூறியுள்ளனர்.
07:15 PM (IST) Apr 04
மாரடைப்பிற்கும், கோவிட் தொற்றுக்கும் உள்ள இணைப்பு கண்டறிய அரசு முயன்று கொண்டு வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
06:06 PM (IST) Apr 04
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
05:37 PM (IST) Apr 04
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை சீனா மாற்றியதன் பின்னணியில் பிரதமர் மோடியின் மௌனம் இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி உள்ளது காங்கிரஸ்.
05:24 PM (IST) Apr 04
நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும்; நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
04:25 PM (IST) Apr 04
300 ரூபாய்க்கு பயணம் செய்து கொண்டு வந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களில் 1500 ரூபாய் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கோவை.ராமகிருஷ்ணன்.
03:38 PM (IST) Apr 04
தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நாய் படத்தை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
02:59 PM (IST) Apr 04
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
01:22 PM (IST) Apr 04
தமிழ் புத்தாண்டுக்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் படிக்க
12:21 PM (IST) Apr 04
நடிகை ஜான்வி கபூரும், குஷி கபூரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் நடிகை ஜான்வி கபூரின் காதலன் ஷிகார் பஹாரியாவும் உடன் சென்றிருந்தார். நேற்று ஷிகார் பஹாரியாவின் பிறந்தநாள் என்பதால் அதற்காக சாமி தரிசனம் செய்ய அவரை திருப்பதிக்கு அழைத்து சென்று இருக்கிறார் ஜான்வி கபூர்.மேலும் படிக்க
10:17 AM (IST) Apr 04
நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். சாகுதலம் படத்தின் புரம்மோஷன் பணிகள் தற்போது பிசியாக நடந்து வருகிறது. அதில் விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. மேலும் படிக்க
09:37 AM (IST) Apr 04
பாலியல் துன்புறத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் டிஜிபி லத்திகா சரண், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் அடங்கிய குழுவை அமைத்துள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட நான்கு பேரின் நீக்கம் குறித்த அறிவிப்பை மாணவர்களின் வலியுறுத்தலை அடுத்து எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
09:30 AM (IST) Apr 04
கோவையில் கடுமையான வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
08:52 AM (IST) Apr 04
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசி உள்ளனர். மேலும் படிக்க
08:21 AM (IST) Apr 04
சிவகங்கை அருகே அரசு பேருந்தும் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
07:50 AM (IST) Apr 04
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டி இது என்பதால் இதனைக் காண ஏராளமான சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ.
07:38 AM (IST) Apr 04
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை அடுத்து அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேள தாளங்கள் முழங்க 200 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் வந்து 50 தட்டுகளில் சீர்வரிசை கொடுத்து இபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.