இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், மழைக்கு வாய்ப்பு, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:49 AM (IST) Dec 06
நடிகர் அஜித் குமார், கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்றுள்ள நிலையில், அங்கு அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் படையெடுத்து வந்துள்ளனர். அவர்களுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்துள்ளார் ஏகே.
11:44 AM (IST) Dec 06
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கார்த்திகை தீபத்திற்காக ஃபிரிட்ஜின் மீது ஏற்றி வைக்கப்பட்ட அகல் விளக்கால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
11:31 AM (IST) Dec 06
விவசாயிகளுக்காக கோவை அருகே இ-நாம் தளம் மூலம் நேரடி வேளாண் பொருட்கள் ஏலம் தொடங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் தேங்காய், பாக்கு போன்ற விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலைக்கு விற்று, பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம்.
11:13 AM (IST) Dec 06
தினமும் புஷ்-அப் உடன் உங்களது நாளை தொடங்கினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
10:50 AM (IST) Dec 06
ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸை கையகப்படுத்த உள்ளது. இதற்காக 7.45 லட்சம் கோடி செலவு செய்திருக்கிறதாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.
10:34 AM (IST) Dec 06
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
10:25 AM (IST) Dec 06
2025-ம் ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் பற்றியும் அது எவ்வளவு வசூலித்தது என்பதை பற்றியும் இங்கே காணலாம்.
10:22 AM (IST) Dec 06
வலிமையான திமுக கூட்டணியை தோற்கடிக்க ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி நல்லது என விஜயின் மனது மாறலாம். கொஞ்சம் காத்திருக்கலாம். அதுவரை அட்டாக் செய்ய வேண்டாம் என ஒரு பெரிய கணக்கு போட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
10:08 AM (IST) Dec 06
TASMAC: தமிழக அரசின் முக்கிய வருவாய் துறையான டாஸ்மாக், ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 8 நாட்கள் மட்டும் மதுபான கடைகள் மூடப்படும்.
09:50 AM (IST) Dec 06
டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பல மணிநேரம் சிக்கித் தவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
09:25 AM (IST) Dec 06
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காத விஜயா, அவனை எப்படியாவது துரத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
09:02 AM (IST) Dec 06
ரஷ்ய அதிபர் புதினுக்காக ராஷ்ட்ரபதி பவனில் அளிக்கப்பட்ட ராஜவிருந்தில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது. இது இந்திய உணவு கலாச்சாரத்தின் முழுமையை பிரதிபலிக்கிறதா என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியது விவாதத்தை உருவாக்கியுள்ளது.
09:02 AM (IST) Dec 06
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.
08:37 AM (IST) Dec 06
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி வாக்குமூலம் கொடுத்தாரா? இல்லையா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
08:17 AM (IST) Dec 06
Car Accident: ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ஐயப்ப பக்தர்களின் சொகுசு காரும், கீழக்கரை திமுக நகரமன்ற தலைவரின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
07:53 AM (IST) Dec 06
இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனம் 400 உதவி மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொறியியல் மற்றும் பார்மசி பட்டதாரிகள் இந்த அரசு வேலை வாய்ப்புக்கு டிசம்பர் 25, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.