- Home
- Lifestyle
- Sapota : ஆயிரம் நன்மைகள்! சப்போட்டா பழத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? ஒருமுறை 'இப்படி' யூஸ் பண்ணி பாருங்க!
Sapota : ஆயிரம் நன்மைகள்! சப்போட்டா பழத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? ஒருமுறை 'இப்படி' யூஸ் பண்ணி பாருங்க!
சப்போட்டா பழத்தில் ஃபேஸ் பேக், ஹேர் பேக் செய்து பயன்படுத்துவதால், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைவது மட்டுமின்றி, கூந்தலையும் அழகாக மாற்றலாம். அது எப்படியென்று இங்கு பார்க்கலாம்.

Sapota Beauty Benefits
சப்போட்டா பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பழம், முக அழகு மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சப்போட்டா ஃபேஸ் பேக்
குளிர்காலத்தில் வறண்ட வானிலையால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இந்த நேரத்தில் சப்போட்டா ஃபேஸ் பேக் பயன்படுத்தி உங்கள் முகத்தை பளபளப்பாக்கலாம்.
தேவையானவை:
சப்போட்டா கூழ் - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன். இவற்றை பேஸ்ட் செய்து முகம், கழுத்தில் தடவவும். காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால் முகம் அழகாக ஜொலிக்கும்.
முகச் சுருக்கங்களை நீக்க
சப்போட்டா கூழுடன் சில இயற்கை பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக், முகச் சுருக்கங்களை நீக்கி, சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
தேவையானவை:
சப்போட்டா கூழ் - 1 டேபிள்ஸ்பூன், ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன், சந்தனப் பொடி - 1 டீஸ்பூன். இவற்றை பேஸ்ட் செய்து முகம், கழுத்தில் தடவி, காய்ந்ததும் மசாஜ் செய்து கழுவவும். இது சுருக்கங்களை நீக்கி சருமத்தை இறுக்கமாக்கும்.
முடி பிரச்சனைகளுக்கு சப்போட்டா
முடி உதிர்தல், நுனி பிளவு போன்ற பொதுவான முடி பிரச்சனைகளுக்கு சப்போட்டா உதவுகிறது. முடி உதிர்தலைக் குறைக்க, சப்போட்டா விதை எண்ணெயை பல ஆண்டுகளாகப் பயன்படுத்துகின்றனர். சப்போட்டா விதை எண்ணெய், கருமிளகு, சப்போட்டா விதை பொடி கலவையை சூடாக்கி, ஆறவைத்து, தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கடலை மாவு கொண்டு முடியை அலசவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தினால் முடி உதிர்தல் குறையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.