இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:20 PM (IST) May 04
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய செய்தி சேனல்களில் பாகிஸ்தானியர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க09:24 PM (IST) May 04
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க09:08 PM (IST) May 04
சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரை பலத்த காற்று மற்றும் கனமழையால் இடிந்து விழுந்தது. பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் ஈவிபி திரையரங்கம் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க08:15 PM (IST) May 04
மேற்கு ராஜஸ்தானை புனே மற்றும் சென்னையுடன் இணைக்கும் புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். புனேயின் ரயில்வே திறனை இரட்டிப்பாக்கும் முதன்மைத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும் படிக்க08:08 PM (IST) May 04
பென் குரியன் விமான நிலையம் அருகே ஹவுத்தி ஏவுகணை விழுந்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பல தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க07:56 PM (IST) May 04
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணை விழுந்ததால், டெல்லி-டெல் அவிவ் விமானம் அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மே 6 வரை விமான சேவையை நிறுத்திவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும் படிக்க07:03 PM (IST) May 04
129 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு சுவாமி சிவானந்தா வாரணாசியில் காலமானார். எளிமை மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்ததற்காக அறியப்பட்ட அவர், தேசியத் தலைவர்கள் உட்பட பல தலைமுறையினருக்கு உத்வேகமாக இருந்தார்.
மேலும் படிக்க
06:17 PM (IST) May 04
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. ஏற்றுமதி உத்திகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க05:54 PM (IST) May 04
ஸ்டாலின் மத்திய அரசு அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க05:54 PM (IST) May 04
ஜியோ, ஏர்டெல், வி, பிஎஸ்என்எல் என எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் ஸ்பேம் அழைப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.
மேலும் படிக்க05:53 PM (IST) May 04
காஷ்மீர் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றக் கோரி பாஜக போராட்டம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க05:47 PM (IST) May 04
ஐபிஎல் போட்டியில் ரசல், ரகுவன்ஷி அதிரடி ஆட்டத்தால் கேகேஆர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 206/4 ரன்கள் குவித்தது.
மேலும் படிக்க05:34 PM (IST) May 04
குறைந்த விலையில் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பைக்கைத் தேடுபவர்களுக்கு டிவிஎஸ் ஸ்போர்ட் ES+ சிறந்த தேர்வாகும். சிறந்த மைலேஜ், வசதிகள் மற்றும் ஸ்டைலிங் ஆகியவை இந்த பைக்கை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. அன்றாட பயணத்திற்கு ஏற்ற இந்த பைக் ரூ.60,881க்குக் கிடைக்கிறது.
மேலும் படிக்க05:27 PM (IST) May 04
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. 15 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க05:17 PM (IST) May 04
நீச்சல் பயிற்சிக்கு வந்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக நீச்சல் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பாலாஜியின் காதலை ஏற்க மறுத்ததால், அந்தப் பெண்ணின் சில புகைப்படங்களை ஆபாச படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க05:16 PM (IST) May 04
27 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள், மாருதியின் இந்த 7 இருக்கை காரை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை, காரணம் தெரியுமா?
மேலும் படிக்க05:12 PM (IST) May 04
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 34 தமிழக மீனவர் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் எனக் கண்டிக்கப்படுகிறது.
மேலும் படிக்க04:55 PM (IST) May 04
பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயம் அடைந்த கிளைன் மேக்ஸ்வெலுக்கு பதிலாக 39 பந்தில் சதம் விளாசிய மிட்ச் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க04:46 PM (IST) May 04
குறைந்த கட்டண விமான டிக்கெட் முன்பதிவு சூட்சுமங்கள்: விமான டிக்கெட்டுகளின் விலையைக் கண்டு ரயில் அல்லது வேறு வழிகளைத் தேடுகிறீர்களா? இனி தேவையில்லை! ₹5,000 மதிப்புள்ள விமான டிக்கெட்டை வெறும் ₹799-க்கு முன்பதிவு செய்ய உதவும் 5 சூட்சுமங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
04:26 PM (IST) May 04
ஏப்ரல் 2025 இல் இந்திய ஆட்டோ சந்தையில் மலிவு விலை மற்றும் ஆடம்பரம் கலந்த கார்கள் அதிகம் விற்பனையாகின. எம்பிவி, ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி வகை கார்களுக்கு அதிக தேவை இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் பற்றி தெரிந்து கொள்வோ
மேலும் படிக்க04:18 PM (IST) May 04
இந்திய மாநிலங்கள் விவசாயம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, பொது பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற நிர்வாகம் போன்ற துறைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
மேலும் படிக்க04:15 PM (IST) May 04
இந்த 5 ஸ்மார்ட் மற்றும் எளிய உத்திகள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம். கூடுதல் வருமானம் ஈட்ட ஐந்து எளிய வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க04:12 PM (IST) May 04
ஓட்டுநர் உரிமங்களுக்கு 'தகுதி மற்றும் குறைபாடு' என்ற பிரிவை அறிமுகப்படுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
மேலும் படிக்க04:08 PM (IST) May 04
இந்தியாவில் 2 கோடி ரூபாய் விலையுள்ள கார், வேறொரு நாட்டில் வெறும் 30 லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்திய நிறுவன உரிமையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 கோடி ரூபாய் கார், அந்த நாட்டில் வெறும் 80 லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க04:05 PM (IST) May 04
அமெரிக்காவைச் சேர்ந்த டிம் ஃப்ரைட், 20 ஆண்டுகளில் 200 முறைக்கும் மேல் நாகப்பாம்பு மற்றும் கருப்பு மாம்பா போன்ற விஷப் பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளார். 700 முறைக்கும் மேல் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் ஒரு புனிதப் பணியை நிறைவேற்றவே செய்துள்ளார்.
மேலும் படிக்க03:55 PM (IST) May 04
அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 92% வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க03:53 PM (IST) May 04
மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தமிழ் பாடலை பாடி அசத்தினார்.
மேலும் படிக்க03:44 PM (IST) May 04
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய சில பங்குகள் உள்ளன. நீண்ட காலத்தில் நல்ல வருமானம் வேண்டுமென்றால், Motilal Oswal மற்றும் Citi ஆகிய நிறுவனங்கள் 10 பங்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளன.
மேலும் படிக்க03:38 PM (IST) May 04
தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:30 PM (IST) May 04
ராகுல் காந்தி மனுஸ்மிருதியை அவமதித்ததாகக் கூறி, சங்கராச்சாரியார் அவரை இந்து மதத்திலிருந்து வெளியேற்றுவதாக கூறியுள்ளார். இந்து கோயில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் சங்கராச்சாரியார் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க03:24 PM (IST) May 04
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளனர்.
மேலும் படிக்க03:20 PM (IST) May 04
நடிகர் சூர்யா, ரெட்ரோ பட புரமோஷனில் கலந்துகொண்டபோது, தன்னுடைய மகள் அனுப்பிய மெசேஜை பார்த்து தான் தேம்பி தேம்பி அழுததாக கூறி உள்ளார்.
மேலும் படிக்க03:18 PM (IST) May 04
கடற்படை, விமானப்படை, தரைப்படை என அனைத்திலும் இந்தியாவின் ராணுவத் திறன்கள் பாகிஸ்தானை விட அதிகமாக உள்ளன. பாகிஸ்தான் சீனாவைச் சார்ந்திருப்பது அதன் ராணுவம் நவீனமயமாவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையான ராஜதந்திரம் தேவைப்படுகிறது.
மேலும் படிக்க03:16 PM (IST) May 04
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படிக்க02:47 PM (IST) May 04
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க
02:33 PM (IST) May 04
2025 ஏப்ரலில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவும் ஒன்று. 16,971 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி மாருதியின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சிக்கு உதவியது.
மேலும் படிக்க02:33 PM (IST) May 04
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார்.
மேலும் படிக்க02:31 PM (IST) May 04
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதிமுக அதை மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க02:22 PM (IST) May 04
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. பீதியில் பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து உளறிக் கொட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க02:02 PM (IST) May 04
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'கூலி' படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், படம் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி உள்ளார்.
மேலும் படிக்க