மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கன்பார்ம்; எவ்வளவு?
அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 92% வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 92% வரை உயர்த்தப்படலாம். இதன் மூலம் அனைவருக்கும் சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
8வது ஊதியக் குழு அப்டேட்
மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் சம்பள திருத்தத்திற்காக எட்டாவது ஊதியக் குழுவை அங்கீகரித்துள்ளது. சமீபத்திய செய்தி அறிக்கைகளின்படி, தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனைக் குழு (NC-JCM) அரசிடம் குறைந்தபட்சம் 2.57 (ஏழாவது ஊதியக் குழுவுக்கு சமமான) அல்லது அதற்கு மேற்பட்ட பிட்மென்ட் பேக்டரைக் கோரியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு
பிட்மென்ட் பேக்டர் என்பது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, 2.57 பிட்மென்ட் பேக்டர் என்பது 157% சம்பள உயர்வு என்று பொருள். ஏழாவது ஊதியக் குழுவிலும் 2.57 பிட்மென்ட் பேக்டர் பயன்படுத்தப்பட்டது,
அரசு சம்பள திருத்தம் 2025
இதன் காரணமாக மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 157% உயர்ந்தது, இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. எனவே, அரசு எட்டாவது ஊதியக் குழுவில் இந்த பேக்டரை மீண்டும் செயல்படுத்தினால், தற்போது ரூ.18,000 சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு
அரசு கோரிக்கையை ஏற்றால், தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18,000ல் இருந்து ரூ.46,260 ஆக உயரும். கூடுதலாக, மாதம் ரூ.9,000 குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.23,130 ஆக உயரும்.