கைத்துப்பாக்கி கட்டாயம்.. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடி.!

By vinoth kumarFirst Published Jul 12, 2024, 3:16 PM IST
Highlights

சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் நியிமிக்கப்பட்டார். தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டேவிட்சன் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் காவல் உதவி  ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்கட்சித் தலைவர்கள்  விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 

Latest Videos

இதையும் படிங்க: Armstrong : 10 நாட்களாக நோட்டம்! ஒயின் ஷாப்பில் ரூட்! 45 நிமிடங்கள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!

சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருணும், தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: காவல் நிலையங்களில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான அதிகாரிகள் இனி கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க:  Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர்.! யார் இந்த அருள்-வெளியான புதிய தகவல்

லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  இனி காவல் நிலை பொறுப்பு அலுவலர்கள் (SHO), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுங்கள். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம் என கூறியுள்ளார். 

click me!