திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

Published : Mar 23, 2026, 01:02 PM IST

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பல்லக்கில் கொடிபட்டம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது . முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலில் 15 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதனையொட்டி முதல்நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். இவர்களது முன்னிலையில் காலை 8.35 மணியளவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
03:22திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
03:51₹10 லட்சம் காப்பீடு முதல் ஊதிய உயர்வு வரை - Vijay வாக்குறுதிகள் அதிரடி..
03:58வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!
04:46தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!
04:29திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!
02:03கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!