சார் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! இதெல்லாம் தப்பு! அடங்காத கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியருக்கு ஆப்பு!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்


கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர். 

Latest Videos

இதையும் படிங்க: மருமகன் இறந்த செய்தி கேட்ட மாமியாருக்கு மாரடைப்பு! கதறிய நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில்!

இந்நிலையில்,  இப்பள்ளியில் பணிபுரியும் ராமச்சந்திர சோனி என்ற ஆசிரியர் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் இதுபோன்று பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையதத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: One Day Tour Package: ஒருநாள் ஆன்மிக சுற்றுலா! வெறும் ரூ.650! எந்தெந்த கோயில்களை தரிசிக்கலாம் தெரியுமா?

இதையடுத்து, பாலியல் தொல்லை அளித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனியை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

click me!