One Day Tour Package: ஒருநாள் ஆன்மிக சுற்றுலா! வெறும் ரூ.650! எந்தெந்த கோயில்களை தரிசிக்கலாம் தெரியுமா?
காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தில் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்கள் அடங்கும்.
Kanchipuram
காஞ்சிபுரம் கோயில் நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட ராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் என பல கோவில்கள் உள்ளன. இதனை ஒரே நேரத்தில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்வதற்கான பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.
Kanchipuram Tour Package
அதன்படி காலை 7.20 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சுற்றுலா பேருந்து புறப்படுகிறது. முதலில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கிருந்து காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். இதனைத் தொடர்ந்து 11 மணிக்கு தேநீர் இடைவேளை விடப்படும். இதனைத் தொடர்ந்து அரக்கோணம் சாலையில் உள்ள மிகவும் பிரசித்து பெற்ற கோவிந்தவாடி குருபகவான் கோயிலுக்கு 11:30 மணிக்குக்கு சென்றடையும்.
இதையும் படிங்க: School Holidays: பள்ளி மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ?
Thiruthani Murugan Temple
அங்கு மதிய உணவு இடைவேளை முடித்த பிறகு அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் அறுபடை கோயில்களில் ஒன்றாக உள்ள திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் மதியம் 1:45 மணி அளவில் சென்றடைகிறது. அதன் பிறகு திருவலங்காடு தேவார சிவ ஆலயத்திற்கு மதியம் 3:30 மணி அளவில் சென்றடையும். அங்கிருந்து திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், பின்னர் 6:45 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் ராமனுஜர் கோயிலுக்கு சென்றடையும். இறுதியாக மீண்டும் இரவு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தடையும்.
Kanchipuram Spiritual Tour
இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ரூ.325 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயிலை தரிசிக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்தி தரிசிக்கலாம் என்றும் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் பூனை வளர்ப்பது நல்லதா.. கெட்டதா? வாஸ்து சொல்வது என்ன?