காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை செய்யப்பட்ட வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி கைது செய்யப்பட்டுள்ளார். நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெண் இன்ஸ்பெக்டர் கொலை
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கஸ்தூரி, இவர் பல்வேறு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதனையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள காலண்டர் தெருவில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தனது ஒரே மகனும் வட மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நிலங்களை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலை கஸ்தூரி பார்த்து வந்துள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் கஸ்தூரி குடியிருந்த வந்த காலண்டர் தெருவில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
அண்ணியை கொடூரமாக பலாத்காரம் செய்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த பயங்கரம்!
கொலைக்கு காரணம் என்ன.?
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வீட்டை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது கஸ்தூரி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து கஸ்தூரி உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட நிலையில் கஸ்தூரி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே இந்த கொலைக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கஸ்தூரிக்கும் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதிக்கும் நில விற்பனை செய்வதில் மோதல் இருந்தது தெரியவந்தது.
மதிமுக மாவட்ட செயலாளர் கைது
இதனையடுத்து சென்னைக்கு குடும்பத்தோடு சென்று கொண்டிருந்த வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் தனது நண்பர் பிரபு என்பவரோடு கஸ்தூரியை சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் காலண்டர் தெருவில் உள்ள வீட்டை விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை செய்ததாக கூறினார். இதனையடுத்து வளையாபதியை சிறையில் அடைத்த போலீசார் பிரபுவை தேடி வருகின்றனர்.
Rekha Nair : நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் துடிதுடித்து பலி.! போலீசார் வழக்கு