அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்! திரும்பி வந்ததும் அமைச்சரவை மாற்றமா?

By SG BalanFirst Published Aug 27, 2024, 10:34 PM IST
Highlights

இன்று அமெரிக்காவுக்குப் புறப்படும் முதல்வர் 17 நாள் பயணமாக அந்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

இன்று அமெரிக்காவுக்குப் புறப்படும் முதல்வர் 17 நாள் பயணமாக அந்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Latest Videos

அப்போது, தமிழகம் திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று தெரிவித்துள்ளார். தனது வெளிநாட்டுப் பயணம் குறித்தும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

கூகுளில் கேட்கக்கூடாத கேள்விகள்: இதை எல்லாம் தேடினால் பதில் வராது! வீடு தேடி போலீஸ் தான் வரும்!

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்! https://t.co/VfFCeb2COb

— M.K.Stalin (@mkstalin)

செப்டம்பர் 14ஆம் தேதி நாடு திரும்பிய பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, "மாத்திரம் ஒன்றே மாறாது. பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதிலளித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, துரைமுருகன் இடையேயான விவகாரம் குறித்துக் கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் கூறியதையே தானும் கூறுவதாகத் தெரிவித்த முதல்வர், நகைச்சுவையைப் பகைச்சுவையாக பார்க்க கூடாது என்று குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின் மூலம் கிடைத்துள்ள முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு பதில் கூறிய முதல்வர், மற்ற மாநிலங்களும் முதலீடுகளை ஈர்க்கும் போட்டியில் இருப்பதால், அவர்கள் அதை வெளியிடுவதை விரும்பமாட்டார்கள் என்று தெரிவித்தார். ஆனால், முதலீடுகள் முழுமை அடைந்த பிறகு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

அமைச்சர்கள், திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் வெற்றி பெற வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

இனி தினமும் மஜா தான்! சரக்கு விலையை தாறுமாறாகக் குறைத்து சர்ப்ரைஸ் கொடுத்த அரசு!!

click me!