அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி, அதிமுக ஒரு ஆலமரம் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அதிமுக- திமுக மோதல்
அதிமுகவும் பாஜகவும் 4 ஆண்டுகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இந்தநிலையில் இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை தனித்து எதிர்கொண்ட நிலையில் 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்தநிலையில் இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை தற்குறி என மோசமாக விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் உருவபொம்மையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
undefined
EPS vs Annamalai : இபிஎஸ் மீதான தரக்குறைவான பேச்சு.! அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கினாரா தமிழிசை.?
அண்ணாமலை விட்டில் பூச்சி
இந்த நிலையில்இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அழிவை நோக்கி அண்ணாமலை சொல்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் அவரது பேச்சு இருந்தது. ஒரு மாநில தலைவருக்கே லாயக்கு இல்லாத ஒரு நபரை பாஜக பெற்றிருக்கிறது என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய வேதனைக்குரிய விஷயம். அண்ணாமலை நிலைமை ஒரு விட்டில் பூச்சி, வீட்டில் பூச்சியின் வாழ்க்கை வெறும் 7 நாள் தான். அவருடைய அரசியல் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதை மறந்துவிட்டு ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கட்சியை 52 ஆண்டு பழைமையான கட்சியை. விமர்சிக்க யோகிதை - தகுதி அண்ணாமலைக்கு இருக்கிறதா!
ஒரு எம்எல்ஏ கூட பெற முடியாது
அதிமுகவை இந்த ஆலமரத்தை, இந்த வீட்டில் பூச்சி ஒழிப்பது வேலை என்று சொல்கிறார்.கருணாநிதியால முடியவில்லை அவரது முப்பாட்டனால் கூட முடியவில்லை. அண்ணா திமுகவை தொட்டுப் பார்த்தால் அவன் நிச்சயமாக கெட்டுப் போனவனாக தான் இருப்பான் இதுதான் வரலாறு, இனி எத்தனை ஏழேழு ஜென்மங்கள் அண்ணாமலை எடுத்தாலும் அதிமுக அழிப்பதற்கு இனி ஒருத்தர் கூட பிறக்க முடியாது.
இனி வரக்கூடிய தேர்தலில் அதிமுகவுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது என அண்ணாமலை சொல்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த தேர்தலில் பாஜக தனியாக நின்றதா ? எத்தனை கட்சியுடன் இவர்கள் கூட்டினை வைத்தார்கள் ! முடிந்தால் தனியாக நின்று பாருங்கள் உங்கள் செல்வாக்கு என்ன என்று தெரியும். சவால் விட்டு சொல்கிறேன் ஒரு எம்எல்ஏ சீட் வெற்றி பெற முடியுமா ? நோட்டாவுடன் மட்டும் தான் நீங்கள் போட்டி போடுவீர்கள். 2026 நோட்டோவுடன் தான் போட்டி போடுகின்ற நிலை தான். என தெரிவித்தார்.
அண்ணாமலையை சும்மா விட்டுறாதீங்க.! கடும் நடவடிக்கை எடுங்க- போலீசில் பொங்கிய அதிமுக