நிதி நிறுத்திவைப்பு.! தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு.!

By Ajmal Khan  |  First Published Aug 27, 2024, 9:21 AM IST

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு குரல் கொடுத்ததால், சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய முதல் தவணை நிதியான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.


தேசிய கல்வி கொள்கை

மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை 2020ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக துவக்கப்பள்ளி முதல் பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை, 3 ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், 2-ம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், 3 ஆண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்கும் என்பதால் எதிர்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 2ஆயிரத்து 152 கோடி ரூபாய் பணத்தில் முதல் தவணை தொகை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

Latest Videos

undefined

ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25 சதவிகித இடங்களுக்கான நிதியை சர்வ விஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. சர்வ விஷ அபியான் திட்டத்தை மத்திய  அரசின் 60 சதவிகித நிதி பங்களிப்புடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

நிதியை நிறுத்திய மத்திய அரசு

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரித்ததால் திட்டத்துக்கான் நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு ஒன்றிய அரசு 4 தவணைகளில் 2ஆயிரத்து 152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணையான 573 கோடி ரூபாயை  ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டிய நிலையில், தமிழக அரசால் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மத்திய அரசு அந்த நிதியை விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியில் சர்வ விஷ அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  

PM Shri: திட்டத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு; தமிழகத்திற்கான ரூ.2 ஆயிரம் கோடியை நிறுத்திய மத்திய அரசு?
 

click me!