முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதால் மூத்த அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பு மறு சீராய்வு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்கான கூட்டம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ் படித்திருக்கிறார் என்றால் அந்த வேலையை தான் அவர் பார்க்க வேண்டும். தி.மு.க விற்கு வேலை பார்க்க விரும்பினால் அவர் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க ஐ.டி விங்கிற்கு வேலைப்பார்க்கட்டும்.
என் குடும்பத்தையும் பலர் இழிவுப்படுத்தினார்கள். அதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பார்கள். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமாரும், அதன் அருகில் உள்ள மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரது மனைவி வந்திதா பாண்டேவும் பணியில் சேர்ந்தது எப்படி? காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தும் நபராக எஸ்பி வருண்குமார் இருக்கிறார்.
undefined
தமிழகத்தில் எகிறிய அரிசி விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள் - என்ன தான் தீர்வு?
தமிழர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோருக்கு இணை அமைச்சர் பதவி வழங்காமல் எல்.முருகனுக்கு பதவி வழங்கியது ஏன்? தமிழர்கள் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி தலைவராக இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்ட சைலேந்திரபாபுவை நிராகரித்த ஆளுநர், பிரபாகரின் நியமனத்திற்கு மட்டும் ஒப்புக்கொண்டது எப்படி?
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் பணியாற்றியவர் பிரபாகர். அதற்கு பிராயசித்தமாக தான் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இவரை நியமிப்பதன் மூலம் தமிழர்கள் யாருக்கும் அரசு வேலை கிடைக்காத நிலை ஏற்படும். திமுக- பாஜக கள்ள உறவு என்றெல்லாம் கிடையாது. இருவரும் ஒன்றுதான். இந்து, ஆர்எஸ்எஸ் பிஜேபி. 90 சதவீத இந்துக்கள் உள்ளனர் என்று திமுக குறித்து முதல்வரே சொல்லி இருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் அரசு வேலை; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அற்புதமான அறிவிப்பு
ரஜினிகாந்த் பேசியதும், துரைமுருகன் பேசியதும் நகைச்சுவைக்காகத்தான். முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக நியமிக்க வேண்டும். தற்பொழுது இருக்கிறவர்களிலேயே புத்திசாலி எடப்பாடி பழனிச்சாமி தான் அவரை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக்கூடாது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், அண்ணாமலை போல ஆளுங்கட்சியாக உள்ள கட்சிக்கு தலைவராகவில்லை. அடிப்படை உறுப்பினரில் இருந்து, படிப்படியாக உயர்ந்து வந்தவர்.
அவர் தற்போதைய ஆட்சியை விட மிக சிறப்பான ஆட்சியை கொடுத்தவர், அவர் ஒன்றும் கார் பந்தயம் விட்டவர் இல்லை. தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளித்தவர். வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி தான். இதுவரை, 50, 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார் செய்து விட்டோம் என்றார்.