தலைமைச் செயலகத்தில் அரசு வேலை; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அற்புதமான அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC Group 5A
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பிரிவில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் உள்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களுக்கான தேர்வும் நடத்தப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகளும், தலைமைச் செயலக பணிகளுக்கான குரூப் 5A தேர்வும் நடத்தப்படுகிறது.
TNPSC Group 5A
அதன்படி புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணையை என்பிஎஸ்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில், புதிதாக இளங்கலை/முதுகலை பிரிவினருக்கான ஒருங்கிணைந்த தொழிநுட்பப் பணி மற்றும் குரூப் 5A அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
TNPSC Group 5A
அரசு துறைகளில் அமைச்சகப் பணிகளில் பணியாற்றுபவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படும்.
TNPSC Group 5A
17 காலி பணியிடங்களுக்கான குரூப் 5A தேர்வு அறிவிப்பு அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி இப்பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை சேவை பணிகளில் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளராக 3 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
TNPSC Group 5A
மேலும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவி இடங்களுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.