அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்

By Velmurugan s  |  First Published Aug 8, 2024, 6:04 PM IST

திருச்சியில் பள்ளி வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் வலிப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டம் கண்டோன்மெண்ட் அருகே பாரதியார் சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே பள்ளியின் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு வகுப்பளையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் உணவு இடைவேளையின் போது வெளியில் விளையாடிவிட்டு மிகவும் சோர்வுடன் பள்ளி வகுப்பறையில் வந்து அமர்ந்த நிலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

Latest Videos

திருச்சியில் நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு; அனுமதி கோரி கடிதம்

வலிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து மயங்கி கீழே விழுந்த மாணவன் நீண்ட நேரம் கீழேயே கிடந்துள்ளான். பின்னர் சிறிது நேரம் கழித்து அடுத்த வகுப்பிற்காக ஆசிரியர் வரும் நேரத்தில் மாணவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனர். அப்போது தான் கீழே கிடந்த மாணவனை அவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக ஆசிரியர்கள் மயக்கமடைந்த மாணவனை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்

அங்து மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல் துயைினருக்கும், மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கூறுகையில், “அவனுக்கு ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். மாணவன் கீழே விழுந்த உடன் முதல் உதவி அளித்திருக்கும் பட்சத்தில் அவனை காப்பாற்றி இருக்கலாம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

click me!