Asianet News TamilAsianet News Tamil

Actor Vijay: திருச்சியில் நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு; அனுமதி கோரி கடிதம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்தும் முயற்சியாக இடத்திற்கு அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

first conference of actor Vijay's Tamilaga Vettri Kazhagam is likely to be held in Trichy vel
Author
First Published Aug 8, 2024, 5:31 PM IST | Last Updated Aug 8, 2024, 5:31 PM IST

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். தொடர்ந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போன்று ஒப்பந்தமாக படங்களை முடித்துக் கொடுக்கும் வேலையிலும் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

'கோட்' பட புரோமோஷன்...! இதை மட்டும் பண்ணவே கூடாது.. ரசிகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட தளபதி.!

இதனிடையே விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துவது தொடர்பான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் முதல் மாநட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே திடலில் முதல் மாநாட்டை நடத்த  ரயில்வே கோட்ட மேலாளரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. முதல் மாநாட்டில் 10 லட்சம் நபர்களை ஒன்று திரட்டி பிரமாண்டத்தை காட்ட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் ஆசைப்படும் நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் 8 ஏக்கர் பரப்பளவு மட்டுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்

மேலும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு தொடர்பான இடங்ளுக்காக தற்போதும் பல மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் நிலையில், முதல் மாநாடு வேறு மாவட்டத்தில் கூட நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios