எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், எடப்பாடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக- பாஜக கடந்த 4 வருடங்கள் கூட்டணி அமைத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் இந்த கூட்டணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலையின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை முறித்தது அதிமுக, இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தோல்வியை தழுவியது. இதனால் இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொய் மட்டுமே பேசுபவர் அண்ணாமலை, எப்படியோ தலைவர் பதவி கிடைத்துவிட்டது. ரொம்ப ஆட்டம் ஆடுகிறார் என எடப்பாடி விமர்சித்திருந்தார்.
இன்று லண்டன் செல்கிறார் அண்ணாமலை.! மாநில தலைவர் பதவியில் மாற்றமா.? இல்லையா.?
இபிஎஸ்- அண்ணாமலை மோதல்
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லையென காட்டமாக விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது என பொதுக்கூட்ட மேடையில் பேசியிருந்தார். இந்தநிலையில் அண்ணாமலையின் பேச்சிற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்தநிலையில் அதிமுக சார்பாக மதுரை காவல் நிலையத்தில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை மீது போலீசில் புகார்
அதிமுகவின் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன் கொடுத்துள்ள புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடும் அவர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தஅண்ணாமலை கடந்த 25.08.2024-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கெட்ட எண்ணத்துடன் பொது அமைதியை சீரகுலைக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அண்ணாமலை மீது நடவடிக்கை.?
தரக்குறைவாக பேசி அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அசிங்கப்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். மேலும் எங்களது கட்சியையும் எங்களது கட்சியின் பொதுச்செயலாளரையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். எனவே பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் மேற்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு என்னை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.! இறங்கி அடிக்கும் அண்ணாமலை