EPS vs Annamalai : இபிஎஸ் மீதான தரக்குறைவான பேச்சு.! அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கினாரா தமிழிசை.?
அதிமுகவும் பாஜகவும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த மோதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மரணமும் அதிமுகவும்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்தை பிடிக்க நடைபெற்ற போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. அந்த நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றிணைந்து மீதமிருந்த 4 ஆண்டுகால ஆட்சியை வழிநடத்தினார்கள். அப்போது 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்கள் தோல்வி அடைந்தது.
அப்போ நாங்க நல்ல கட்சி.. இப்போ கெட்டவங்களாக மாறிட்டோமா.? அண்ணாமலைக்கு எதிராக சீறிய இபிஎஸ்
அதிமுக உட்கட்சி மோதல்
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்த நிலையில் திமுகவிடம் ஆட்சியை பறி கொடுத்த அதிமுகவில் மீண்டும் மோதல் அதிகரித்தது. இரட்டை தலைமை தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டதையடுத்து ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் மேற்கோண்டார். ஒரு கட்டத்தில் பொதுக்குழுவில் வைத்து ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அண்ணாமலை - இபிஎஸ் மோதல்
இந்த காலகட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி எளிதானது. போட்டியிட்ட 40 இடங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் - அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு தொலைக்காட்சி மைக்கை கண்டால் பேசும் வியாதி உள்ளது. ஏதோ ஒரு வகையில் தலைவர் பதவியை பெற்றுவிட்டார். இப்போது தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை பதிலடி
அதிமுக ஊழல் ஆட்சி மோசமான ஆட்சி என்றெல்லாம் பாஜக தலைவர் விமர்சிக்கிறார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட போதெல்லாம் இது தெரியவில்லையா.? அதிமுக ஆதரவுடன் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றிய போதெல்லாம் தெரியவில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு என்னை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.! இறங்கி அடிக்கும் அண்ணாமலை
எடப்பாடிக்கு தகுதி இல்லை
பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லையென காட்டமாக விமர்சித்தார். மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது என அண்ணாமலை கூறினார்.
தமிழிசை அட்வைஸ்
இதனிடையே அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விமர்சனத்தை பெற்றது. முன்னாள் முதலமைச்சரை தரைக்குறைவாக பேசியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை, பாஜக தலைவரின் சொற் பொழிவிற்கு பதில் அளிக்க வேண்டாம் என நான் நினைக்கிறேன். அவர், அவர்களுக்கு என்று ஒரு பாணி உள்ளது. மாநில தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் எதிர்கட்சி தலைவருக்கு என்ற மரியாதை கொடுக்க வேண்டும்
வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கருத்து. தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதைகளை நிச்சயம் கொடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.
அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லையென அண்ணாமலை அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், மாநில தலைவருக்கு கருத்து சொல்வதற்கும், முடிவு எடுப்பதற்கும் உரிமை உள்ளது. பின்பு விவாதத்திற்கு உட்படுத்தப்படலாம். பலரிடம் கருத்து கேட்கப்படலாம். மேடையில் மட்டும் முடிவு எடுப்பது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது எனது கேள்வி. எனவே இதனை வைத்து எனக்கும் அண்ணாமலைக்கு இடையே மோதலை ஏற்படுத்தி விடக்கூடாது. எனது அனுபவம் வேறு, அவரது அனுபவம் வேறு, கட்சியில் 5 வருடம் மாநில தலைவராக இருந்தவர் தான். அவருடைய கருத்தை அழுத்தமாக தெரிவிக்கிறார்.
கட்சி ரீதியாத நிர்வாகிகள் கருத்து பின்னர் கேட்கப்படும். எனவே இன்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்வது தான் கட்சி தொண்டர்களின் முடிவாக இருக்கும் நானும் இப்போது ஒரு சாதாரண தொண்டர் தான். எனவேஇந்த கருத்திற்கு மறுத்து பேச முடியாது. வரும் காலங்களில் விவாத்ம வரலாம் என தமிழிசை தெரிவித்தார்.