மருமகன் இறந்த செய்தி கேட்ட மாமியாருக்கு மாரடைப்பு! கதறிய நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில்!
திண்டுக்கல்லில் திருமணமான 10 மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணி மனைவியைப் பார்க்கச் சென்ற இளைஞர் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்து கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த மாமியார் மாரடைப்பால் இறந்தார், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Love Marriage
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). ஹோட்டல் ஒன்றில் பாஸ்ட் புட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர், 10 மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாளை (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
Dindigul News
நிறைமாத கர்ப்பிணியான நாகம்மாள் தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மனைவியை பார்க்க அருண்குமார் தினமும் இரவு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வேலை முடிந்து சிலுக்குவார்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர், அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையும் படிங்க: School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
Pregnant Wife Admitted Hospital
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மருமகன் உயிரிழந்த செய்தியை கேட்ட மாமியார் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து தாயும் உயிரிழந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதை அடுத்து நாகம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.