Published : Aug 23, 2023, 06:01 AM ISTUpdated : Aug 24, 2023, 12:20 AM IST

Chandrayaan-3 soft landing live : நிலவில் தடம் பதித்த இந்தியா - சந்திரயான்3 வெற்றி!

சுருக்கம்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது

Chandrayaan-3 soft landing live : நிலவில் தடம் பதித்த இந்தியா - சந்திரயான்3 வெற்றி!

12:20 AM (IST) Aug 24

சந்திரயான்-3 வெற்றி: பொறாமையில் பொங்கும் பாகிஸ்தான்; வரவேற்கும் மக்கள்!

சந்திரயான்-3 வெற்றியால் பாகிஸ்தான் ஊடகங்கள் பொறாமையை கக்கி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

11:20 PM (IST) Aug 23

சந்திரயான்3 வெற்றி: விஞ்ஞானி வீரமுத்துவேலுவுக்கு செல்போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சந்திரயான்3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் செல்போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

10:51 PM (IST) Aug 23

இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை வழங்குவதில் மகிழ்ச்சி: தென் ஆப்பிரிக்க அதிபர்!

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா பாராட்டியுள்ளார்

10:41 PM (IST) Aug 23

வீரமுத்துவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சந்திரயான் 3-இன் திட்ட இயக்குநராக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் உடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்

09:56 PM (IST) Aug 23

இறங்கும் இடத்தை சிறப்பாகத் தேர்வு செய்த லேண்டர்!

சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்தின் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. படத்தில் லேண்டரில் உள்ள கால் ஒன்றின் நிழல் தெரிவதை சுட்டிக்காட்டியுள்ளது. இறங்குவது ஏற்ற சமதளப் பரப்பை சிறப்பாக தேர்வு செய்திருப்பதாவும் கூறியுள்ளது.

09:14 PM (IST) Aug 23

இஸ்ரோ குழுவினருக்கு சத்குரு வாழ்த்து

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது பாரதம் கொண்டாடும் பெருமையான நாள் என ஈஷா யோகஆ மையத்தின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

09:08 PM (IST) Aug 23

India'IS RO'cking: இஸ்ரோவுக்கு குவியும் பாராட்டுகள் - பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன

09:08 PM (IST) Aug 23

நிலவில் இந்தியா: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்

09:08 PM (IST) Aug 23

இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!

இஸ்ரோ சந்திரயான் திட்டத்தின் மூன்று நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்

08:40 PM (IST) Aug 23

லேண்டர் எடுத்த புதிய படங்கள்: இஸ்ரோ வெளியீடு

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கும் சந்திரயான்-3 லேண்டருக்கும் இடையேயான தகவல் தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து லேண்டர் நல்ல நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தரையிறங்கிய பின் லேண்டர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

08:31 PM (IST) Aug 23

இஸ்ரோவுக்கு வரும் பிரதமர் மோடி

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டுவதற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

07:03 PM (IST) Aug 23

ஈஷா யோக மையத்தில் வெற்றி கொண்டாட்டம்

ஈஷா யோக மையத்தில் வெற்றி கொண்டாட்டம் 

06:59 PM (IST) Aug 23

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!!

சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பேசினார்.

06:59 PM (IST) Aug 23

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்!!

சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பேசினார்.

06:58 PM (IST) Aug 23

தமிழர் வீரமுத்துவேல் பெருமிதம்!!

நிலவில் விக்ரம் லேண்டர் கால் பதித்த பின்னர் இந்த திட்டத்தில் பணியாற்றிய துணை இயக்குநரும் தமிழருமான வீரமுத்துவேல் பேசினார் 

06:48 PM (IST) Aug 23

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கியதும் உடனடியாக தென் ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசியில் பேசினார்.

06:40 PM (IST) Aug 23

நிலவில் மணல் மழை பெய்யும்!!

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியத்தை அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு மணல் மழை பெய்யும். நான்கு மணி நேரத்துக்குப் பின்னர்தான் அதிசய நிகழ்வாக விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் தரையிறங்கும். இரண்டும் ஒருவருக்கு ஒருவர் தங்களை படம் எடுத்துக் கொள்வார்கள். இரண்டரை மணி நேரத்துக்குப் பின்னர் பிரக்யான் ரோவர் இயக்கப்படும். மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் ரோவரில் இருக்கும் சோலார் பேனல் இயங்கும்.

06:33 PM (IST) Aug 23

வீரமுத்துவேலுக்கு சோம்நாத் பாராட்டு!!

பிரதமர் மோடி வெற்றி குறித்து பேசி இஸ்ரோ குழுவினரை பாராட்டினார். இவரைத் தொடர்ந்து சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட வெற்றிக்கு பாடுபட்ட அனைவரையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டி பேசினார். 

06:20 PM (IST) Aug 23

சந்து மாமாவுக்கு மதர் இந்தியா ராக்கி கயிறு கட்டினார்!!

06:15 PM (IST) Aug 23

தென் துருவத்தில் முதல் விண்கலம் சந்திரயான் 3!!

நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் சந்திரயான் 3 என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

06:13 PM (IST) Aug 23

பிரதமர் மோடி பெருமிதம்!!

இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம். புதிய இந்தியா உருவாகியுள்ளது என்று பிரதமர் பெருமிதம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது என்றார்.

06:04 PM (IST) Aug 23

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்3

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்3. மென்மையாக தரையிறக்கும்  பணி வெற்றி

05:59 PM (IST) Aug 23

விக்ரம் லேண்டர் எங்கே தரையிறங்கும்?

நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே விக்ரம் லேண்டர் தரையிறங்கும். இதில் இருந்து ரோவர் பிரக்யான் வெளியே இறங்கும் 

05:57 PM (IST) Aug 23

தென் ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி!!

தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து பிரதமர் மோடி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

05:56 PM (IST) Aug 23

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி - 2வது சுற்று ஆட்டமும் டிரா

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 2ஆவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. டைபிரேக் போட்டி நாளை நடைபெறவுள்ளது. மகுடம் சூடப்போவது பிரக்ஞானந்தாவா? கார்ல்சனா? என்பது நாளை முடிவாகும்

05:56 PM (IST) Aug 23

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கியது

சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கியது. 15 நிமிடங்களில் 8 கட்டங்களாக தரையிறங்கும். முதல் கட்டமாக 30 கி.மீ உயரத்திலிருந்து 7.4 கி.மீ உயரமாக குறைக்கப்படும் பணி தொடங்கியது

05:53 PM (IST) Aug 23

நிலவில் இருந்து தற்போது 22 கி.மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர்!!

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கம் பணி துவங்கியது. திட்டமிட்டபடி மாலை 5.44 மணிக்கு நிலவில் தரையிறங்கும் பணி துவங்கியது. தற்போது 31 கி.மீட்டர் வேகத்தில் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிக் கொண்டு இருக்கிறது. தற்போது நிலவின் தரைப் பகுதியில் இறந்து 27 கி. மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
 

05:47 PM (IST) Aug 23

Live : Chandrayaan 3: நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் சரித்திர நிகழ்வு நேரலை!!

இன்னும் சற்று நேரத்தில் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. அதன் நேரலையை இங்கே காணலாம்.

விக்ரம் லேண்டர்

04:53 PM (IST) Aug 23

சந்திரயான்-3: லேண்டரின் வருகைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!

சந்திரயான்-3 திட்டத்தின் தானியங்கி தரையிறங்கும் வரிசையை தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

04:53 PM (IST) Aug 23

ஒன்றிய அரசு கல்வி நிறுவன தேர்வுகளில் இந்தி கட்டாயம்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிட தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடம் தொடர்பான உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்

04:45 PM (IST) Aug 23

'ஜெய் ஹோ இஸ்ரோ!' மணல் சிற்பம்

சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் டென்வர் நகரில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய 'ஜெய் ஹோ இஸ்ரோ' மணல் சிற்பம்

03:41 PM (IST) Aug 23

Allowance Hike : முதல்வரின் முக்கிய அறிவிப்பு.. இவர்களுக்கு உதவித்தொகை உயர்வு - முழு விபரம் இதோ !!

முதல்வர் இவர்களுக்கு உதவித்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கி கணக்கில் 3000 ரூபாய் வரை வரும்.

03:12 PM (IST) Aug 23

அனைத்தும் தயாராக உள்ளன! இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 தரையிறங்கும் முயற்சியைத் தொடங்க அனைத்தும் தயாராக உள்ளன. மாலை 5:44 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு லேண்டரின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். இஸ்ரோவின் குழு கட்டளைகள் வரிசையாக செயல்படுத்துவதை உறுதிசெய்துகொண்டே இருக்கும். தரையிறங்கும் செயல்பாடுகளின் நேரடி ஒளிபரப்பு மாலை 5:20 மணிக்குத் தொடங்கும்.

02:42 PM (IST) Aug 23

iPhone : புது போன் வாங்க போறீங்களா.? குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் 11, 12 & 14 - முழு விபரம் இதோ !!

ஆப்பிள் ஐபோன் எப்போதும் ப்ரீமியம் வாடிக்கையாளருக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 11, 12 மற்றும் 14 மாடல்கள் சலுகை விலையில் விற்பனையாகி வருகிறது.

01:54 PM (IST) Aug 23

Jio Plan : இலவச நெட்ஃபிளிக்ஸ்.. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா - ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்

இலவச நெட்ஃபிளிக்ஸ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் மூலம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக காணலாம்.

01:27 PM (IST) Aug 23

BSNL : வெறும் 200 போதும்.. தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் - எத்தனை நாட்களுக்கு தெரியுமா.?

பிஎஸ்என்எல்லின் மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், தினசரி 2ஜிபி டேட்டாவுடன் இலவச அழைப்பு ரூ.200க்கும் குறைவாக கிடைக்கும்.

01:07 PM (IST) Aug 23

Chandrayaan 3 | இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் பரிசோதனை நடந்தது இப்படித்தான்?

சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகள் சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றப்பட்டு, 50 டன் அனார்தசைட் மண் இஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது.

01:00 PM (IST) Aug 23

தரையிறங்க தயாராக இருக்கும் விக்ரம் லேண்டர்!!

தரையிறங்க தயாராக இருக்கும் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர். இதற்கான சீகுவன்ஸ் துவங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

12:59 PM (IST) Aug 23

TVS : ஸ்மார்ட் ஆப்ஷன்கள்.. தெறிக்கும் ஸ்பீட் - எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் போட்டியில் முந்தும் டிவிஎஸ் !!

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு Xonic என்று பெயர் வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

12:07 PM (IST) Aug 23

Chandrayaan 3 | தங்க நிற தகடால் மூடப்பட்ட சந்திரயான் 3!

 

சந்திரயான் 3 ஏவப்பட்ட பிறகு, இஸ்ரோ வெளியிட்ட விண்கலப் படங்கள், ஏவுகணையின் ஏவுதல் குறித்த படங்கள், வீடியோக்கள் மற்றும் பல காட்சிகளை நம்மில் பலர் பார்த்திருப்போம், ஆனால் அந்த சந்திரயான் 3 விண்கலத்தைச் சுற்றி ஒரு தங்க தகடு உள்ளதே அதை யாரும் கணவனித்தீர்களா? சரி அப்படி கவனத்திருந்தால், அந்த தங்க மூலம் பூசப்பட்ட தகடு எதற்காக பொருத்தப்பட்டுள்ளது என்பதை இப்பொது தெரிந்துகொள்ளலாம்