Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. திருப்பத்தூரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..!

By vinoth kumarFirst Published Oct 11, 2022, 7:11 AM IST
Highlights

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர் அறிவித்துள்ளார். 

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார். 

வட தமிழகப் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க;- மக்களே உஷார் !! இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

இந்நிலையில், திருப்பத்தூரில் நேற்றிரவு முதல் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது.  இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- ரெட் அலர்ட்.. இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

click me!