ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திடம் ரூ.600 கோடி பெற்று திமுக அதனை முழுமையாக ஆதரிக்கிறது - அதிமுக எம்எல்ஏ சாடல்

By Velmurugan s  |  First Published May 3, 2024, 5:08 PM IST

ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக 600 கோடி பெற்றது. திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைப்பதாக மதுரையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் அதிமுக சார்பாக இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கொடைக்கானலில் காட்டு தீ பற்றி எரிகிறது. 

மறுபுறம் ஆவியூரில் வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்காடு விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போதை வஸ்துகளால் ஆங்காங்கே கலவரம் நடைபெறுகிறது. இந்த அளவுக்கு அரசு மோசமான நிலையில் உள்ளது. முதல்வர் சுற்றுலா சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் உடனடியாக தலையிட்டு இதனை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

ஆளும் கட்சிக்கு நன்கொடை அளிக்கும் எண்ணம் கிடையாது. அரசு கையில் இருக்கும் காரணத்தால் குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு முயற்சிக்கலாம். எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். 

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மீண்டும் சர்க்யூட் பேருந்து; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

எந்தெந்த தவறுகளுக்கெல்லாம் உடமையாக இருக்க முடியுமா அதுக்கெல்லாம் திமுக உடந்தையாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் நிறைவேற்ற முற்பட்டபோது அதற்கும் திமுக ஆதரிக்கவில்லை. இப்போதும் ஆதரிக்கவில்லை. அனைத்து கட்சிகளும் தேர்தலின் போது வங்கி பத்திரங்கள் மூலம் நிதி வாங்கினர். அதிமுகவிற்கு ஆறு கோடி நிதி சிஎஸ்கே அணி வழங்கியது. ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக 600 கோடி பெற்றது. திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது. மார்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள். மாட்டினின் எல்லா தவறுகளுக்கும் காரணம் மக்கள் புரிந்து கொண்டுதான் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.

click me!