மதுரையில் ஆரம்ப சுகதார நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்; தடுப்பூசி போட வந்தவருக்கு தையல்

By Velmurugan s  |  First Published May 3, 2024, 5:41 PM IST

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேத்திக்கு தடுப்பூசி செலுத்த அழைத்து வந்த மூதாட்டி மீது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்.


மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த வேல் முருகன். இவர் தனியார்  ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு வயது பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளன.

2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

Latest Videos

இந்நிலையில் இன்று  விமலாவின் தாயார் போது மணி (57) மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பேத்தி இரண்டு மாத பெண் குழந்தை மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன் தடுப்பூசி போட அழைத்து வந்துள்ளார்.

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மீண்டும் சர்க்யூட் பேருந்து; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

அப்போது எதிர்பாராத விதமாக சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து போது மணி அம்மாவின் தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்போது போதுமணியம்மாள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு மாத பெண் பெண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் காயம் ஏதுமின்றி தப்பித்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதற்காக தனது இரண்டு மாத பேத்தியுடன் வந்த மூதாட்டியின் தலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!