ISRO: 2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

By Velmurugan s  |  First Published May 3, 2024, 4:14 PM IST

2040ல் நிலவில் இந்தியர்களை தரையிரக்கி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தை நோக்கி இஸ்ரோ பயணிப்பதாக அதன் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ராவின் முன்னாள் தலைவர் சிவன் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டம் கெகன்யா என்ற திட்டம் விண்ணிற்கு மனிதனை அனுப்பி பத்திரமாக திருப்பி பூமிக்கு அழைத்து வருவதாகும். 

Tap to resize

Latest Videos

undefined

இந்த திட்டத்தில் பல்வேறு திட்ட சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் பயணம் செய்யும் மனிதர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. நாசாவும், இஸ்ரோவும் சேர்ந்து NISAR என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக இஸ்லாமியர் மீது பொய் புகார்; இந்து முன்னணி பிரமுகர் கைது

இதே போன்று வரும் 2035க்குள் விண்வெளியில் இஸ்ரோ சார்பில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான திட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வரும் 2040-ல் இஸ்ரோ சார்பில் இந்திய மனிதன் ஒருவரை நிலவில் இறக்கவும் இஸ்ரோவிடம் திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

click me!