மக்களே அடுத்த மூன்று நாட்களுக்கு பயங்கர அனல் காற்று வீசும் ! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

By Selvanayagam PFirst Published May 13, 2019, 9:13 PM IST
Highlights

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆண்வு மையம் எச்சரித்துள்ளது.
 

கடந்த 4 ஆம் தேதி முதல்  கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம்  தொடங்கியது. இதையடுத்து தமிகத்தில் பல நகரங்களில் வெயில் 100 டிகியைத் தாண்டி வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக, மழையும் பெய்து வருகிறது..

இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4 செ.மீ., நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியில் 3 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் 2 செ.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் ஊட்டியில் 1 செ.மீ. மழை  பெய்துள்ளது.

இதனிடையே இன்னும் மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் அதிகமிருக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பயங்கர அனல் காற்று வீசக்கூடும் என்றும், மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகளவில் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்குமென்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட் என இருக்குமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 4 நாட்களுக்கு வெப்பச்சலனம் இருக்குமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்.தகவல் வெளியிட்டுள்ளது 

click me!