CBSE Result 2024 : சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு எப்போது.? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்.?

By Ajmal Khan  |  First Published May 3, 2024, 10:18 AM IST

தமிழக அரசின் பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வருகிற 6ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும், 10ஆம் தேதி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சி.பி.எஸ்.சி பாடப்பிரிவு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 12 ஆம் தேதி தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள்

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி திட்டமிட்டப்படி  முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக பள்ளி தேர்வு முடிவுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக அரசு பாட திட்டத்தில் படித்த பொதுத்தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வருகிற 6 ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வருகிற 10ஆம் தேதியும் வெளியிடப்படவுள்ளது. 

Tap to resize

Latest Videos

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்

இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தாங்ககள் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு தேர்வு முடிவுகளை அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதே போல சிபிஎஸ்சி பாடப்பிரிவுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 12 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எந்த இணையதளத்தில் ரிசல்ட்.?

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும், பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை  39 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் cbsc.gov.in மற்றும் result.cbsc.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாக உள்ளது.

10, 12 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது .? எந்த தேதியில் வெளியீடு.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
 

click me!