Vijayakanth : மறைந்தும் மக்களுக்கு உணவு கொடுக்கும் வள்ளல்... விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

Published : May 03, 2024, 09:34 AM ISTUpdated : May 03, 2024, 09:56 AM IST
 Vijayakanth : மறைந்தும் மக்களுக்கு உணவு கொடுக்கும் வள்ளல்... விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

சுருக்கம்

விஜயகாந்த் மறைந்து 125 நாட்களில் தமிழக முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளனர். இந்தநிலையில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் மக்கள் பணி

நடிகராக அறிமுகமாகி மக்கள் மனதில் என்றும் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த், திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் இருந்தே தனது நற்பனி மன்றம் மூலம் மக்கள் பவ வகையிலும் உதவி செய்தவர், வாழ்க்கையில் கை தூக்கிவிடும் நபராக விஜயகாந்த் திகழ்ந்தார்.

உணவு இல்லாதவர்கள் விஜயகாந்த் திருமணம் மண்டபம் அல்லது அவரது அலுவலகம் வந்தால் சாப்பிட்டு விட்டு செல்லலாம். அந்த வகையில் மக்களுக்கு உதவி செய்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவை துக்க தினமாக தமிழக மக்கள் அனுசரித்தார்கள். பல ஊர்களில் இருந்து வந்தும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி செல்கின்றனர். 

உலக சாதனை விருது

இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு 125 நாட்களில் தமிழக முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளனர். விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது. இந்தநிலையில் இது லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று முன் தினம் நினைவிடத்தில் நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் திடீரென கூடிய வெயிட்... 100 பயணிகளின் உடமையை விட்டு சென்ற பிளைட்- துபாயில் தவிக்கும் தமிழக பயணிகள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை