தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் மீது பொய்யாக புகார் அளித்த இந்து முன்னணி பிரமுகர் மீது கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் இந்து முன்னனி நகரத் தலைவராக பொறுப்பு வகிப்பவர் சூர்ய பிரசாத் (வயத 28). இவர் கடந்த 30ம் தேதி செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாக கூறி அவரை மிரட்டி செல்போனை பறித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கோவையில் அடுத்தடுத்து 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை; அதிர்ச்சியில் பெற்றோர், போலீசார்
காவல் துறையினர் ஆய்வு செய்த போது, செல்போனில் படம் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து பொய் புகார் அளித்தது தெரியவந்தது.
ஆளும் கட்சியினரை விடாது துரத்தும் குடிநீர் பிரச்சினை; கோவையில் மேயர் வீட்டருகே பொதுமக்கள் மறியல்
இதையடுத்து அசாருதீன் அளித்த புகார் அடிப்படையில் இந்து முன்னனி பிரமுகர் சூர்ய பிரசாத்தை செல்வபுரம் போலீஸார் கைது செய்தனர். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் மீது இந்து முன்னணி பிரமுகர் பொய் புகார் அளித்து நாடகமாடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.