போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

By Manikanda PrabuFirst Published Mar 1, 2024, 5:01 PM IST
Highlights

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

Latest Videos

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்!

ஆனால், அவர் ஆஜராகததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

முன்னதாக, திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக். போதை பொருள் வழக்கில் சிக்கியதையடுத்து, அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!