திரும்பத் திரும்ப அசிங்கப்படும் திண்டுக்கல் சீனிவாசன்: தன் துறையை பற்றி கூட தெரியாத அவலம்.

By manimegalai aFirst Published Dec 15, 2018, 1:59 PM IST
Highlights

அபத்தமாக பேசி, மிக கடுமையான நக்கல் நய்யாண்டி விமர்சனங்களில் சிக்கிக் கொள்வதென்பது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழக்கமான செயல். ஆனால் நேற்று அவர்  பேசியிருப்பதோ தாறுமாறாக தலையிலடிக்க வைக்கும் விவகாரம்....
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், மற்ற துறைகளைப் பற்றி தத்துப்பித்தாக ஆயிரம் பேசியிருக்கிறார். 

அபத்தமாக பேசி, மிக கடுமையான நக்கல் நய்யாண்டி விமர்சனங்களில் சிக்கிக் கொள்வதென்பது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழக்கமான செயல். ஆனால் நேற்று அவர்  பேசியிருப்பதோ தாறுமாறாக தலையிலடிக்க வைக்கும் விவகாரம்.... தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், மற்ற துறைகளைப் பற்றி தத்துப்பித்தாக ஆயிரம் பேசியிருக்கிறார். 

அதற்கு மிக நக்கலான விமர்சனங்களை வாங்கிக் கட்டியிருக்கிறார். அதை கூட கண்டும் காணாமலும் கடந்து சென்றுவிடலாம். ஆனால் கோயமுத்தூரில் அவர் பேசியிருப்பதை சகிக்க முடியவில்லை. 

வனக்கல்லூரியில் மாநில வனத்துறை விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன்...”இந்த மாவட்டத்துல காட்டு யானைகளின் தொல்லையால் மனித உயிரும், பயிரும் சேதாரமாகிறது. காட்டு யானைகளை தடுக்கத்தான் கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்துறோம். ஆனால் அதுங்களுக்கும் டிமிக்கி கொடுத்துட்டு தப்பிவிடுதுங்க. விவசாயிகளுக்கும் டிமிக்கி கொடுத்துட்டு அவங்க பயிரை சேதப்படுத்திடுது.” என்று வெள்ளந்தியாக பேசியபோது வெறும் புன்னகை மட்டும் எழுந்தது பார்வையாளர்கள் வட்டாரத்தில். 

ஆனால் அடுத்து, “சிங்கம், புலி தாக்கி உயிரிழப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. யாரும் சிங்கம், புலி தாக்கி வேண்டுமென்றே உயிரிழப்பதில்லை.” என்று அவர் பேச கூட்டத்தில் பெரும் சிரிப்பலை. ஏன் சிரிக்கிறாய்ங்க? நல்லாதானே போயிட்டிருக்கு? என்று குழம்பியபடி அமைச்சர் உட்கார்ந்துவிட்டார். 


பார்வையாளர்களாய் இருந்தவர்கள் வனம் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் சிரிக்க காரணம், தமிழகத்தின் வனங்களில் சிங்கங்கள் கிடையாது. சிங்கம் வாழும் சூழல்  இங்கே இல்லை. தமிழகத்தில் ஏன்,  தென் இந்தியாவில் எங்குமே சிங்கங்கள் இல்லை. இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் சிங்கங்கள் இருக்கின்றன. 

உண்மை இப்படியிருக்க, தன் துறையை பற்றி கூட முழுதாய் தெரியாமல், தன் துறையின் அடிப்படை விஷயத்தை பற்றி கூட அறிந்து வைத்திருக்காமல் ‘வனத்துறை அமைச்சர்’ என்று அதிகாரம் காட்டி, திண்டுக்கல் சீனிவாசன் வளைய வருவதை என்ன சொல்ல?
திண்டுக்கல்லார் இப்படி பேசிய பிறகு, அவரை கிண்டலடித்து எழுந்திருக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ரகங்கள். 
அய்யோ பாவம் ஜெயலலிதாவின் ஆன்மா!


    

click me!