ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு - நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

By Raghupati RFirst Published Jan 16, 2023, 7:01 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவியை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிதியுதவியை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த திரு.இரா.அரவிந்தராஜ் (வயது 24) த/பெ திரு.இராஜேந்திரன் என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த திரு. அரவிந்த் (வயது 25) த/பெ மாரிமுத்து  என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்‌.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!

இதையும் படிங்க..நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!

click me!