"ஒருமுறையாவது அஷ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக்க வேண்டும்" என்று பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

09:31 PM (IST) Jul 01
இந்தியாவில் கொள்கை மீறல்களுக்காக 11 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை ட்விட்டர் தடை செய்துள்ளது. அதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
09:11 PM (IST) Jul 01
5.19 மில்லியன் மோசடியை தடுத்த சிங்கப்பூர் காவல்துறை. பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
08:55 PM (IST) Jul 01
கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
07:31 PM (IST) Jul 01
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு குட் நியூஸ். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 15 ஆம் தேதி தொடங்குகிறது.
06:22 PM (IST) Jul 01
தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
04:52 PM (IST) Jul 01
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
04:02 PM (IST) Jul 01
தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
03:31 PM (IST) Jul 01
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.
03:15 PM (IST) Jul 01
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
01:37 PM (IST) Jul 01
ஒடிசாவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 800 ஏக்கர் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
12:38 PM (IST) Jul 01
ஓசூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
12:03 PM (IST) Jul 01
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை
கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
11:04 AM (IST) Jul 01
தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. யூனிட் ஒன்றுக்கு ரூ.11ல் இருந்து ரூ.11.25 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
10:10 AM (IST) Jul 01
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:54 AM (IST) Jul 01
கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
09:53 AM (IST) Jul 01
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:36 AM (IST) Jul 01
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:46 AM (IST) Jul 01
டைமண்ட் லீக் தடகள போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகின்றன. இந்த டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.
07:46 AM (IST) Jul 01
அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு வகைகளில் அதிகமான தொகையை ஊழல் செய்து முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கிய காரணத்தினாலேயே அவரை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் உடன் இருந்து கவனித்து கொள்கிறார்கள். திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாலின் நேரில் சென்று சந்திக்காதது ஏன்?