பொது சிவில் சட்ட மசோதா.. டெல்லிக்கு செக் வைக்கும் பாஜக - புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனல் பறக்குமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழுமம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள் முடங்கியது.
இதனை தொடர்ந்து அவை சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடந்தது. பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதோடு அவரது எம்.பி. பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பெரும்பாலான நாட்கள் முடங்கியது.
இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட்11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் நிலவரம், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் நிலவரும் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பல்வேறு இடங்களில் அதனை வலியுறுத்தி பேசி வருகிறார். இந்த விவகாரம் மழைக்கால கூட்டத்தொடரில் பெரும் புயலை கிளப்ப வாய்ப்புள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு
குறிப்பாக இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) பெரும் சவாலாக இருக்கும். ஏனென்றால், ஆம் ஆத்மி கட்சியும் முன்பு தான் UCCக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தாலும், எதிர்கட்சிகளிடையே ஆம் ஆத்மியின் முடிவு கடும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது. டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) ஆணைக்கு மாற்றாக ஒரு மசோதாவை அரசாங்கம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
டெல்லி அரசுக்கு சேவைகள் விவகாரத்தில் அதிக சட்டமன்ற மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவசரச் சட்டம் திறம்பட ரத்து செய்தது. மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவும் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சோனியா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தொடரில் எழுப்ப கலந்தாலோசித்து வருகிறார்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆனது பெரும் புயலை கிளப்பும் என்று சொல்லலாம்.