ரூ.2 லட்சம் கோடி.. 800 ஏக்கரில் இந்தியாவில் அமையவுள்ள பிரமாண்ட செமிகண்டக்டர் யூனிட் - எங்கு தெரியுமா.?
ஒடிசாவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 800 ஏக்கர் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், ஒடிசாவில் உள்ள கஞ்சம் என்ற மாவட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 30,000 கோடி முதலீட்டில் ஒரு பெரிய குறைக்கடத்தி அதாவது, செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் யூனிட்டை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டமானது சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புடையது ஆகும்.
SRAM & MRAM Technologies and Projects India Pvt Limited, UK-ஐ தளமாகக் கொண்ட SRAM & MRAM குழுமத்தின் இந்தியப் பிரிவானது, செமிகண்டக்டர் யூனிட் அமைக்க மார்ச் 26 அன்று மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இங்குள்ள சத்ராபூர் அருகே சில இடங்களைப் பார்வையிட்ட பிறகு, அதன் தலைவர் குருஜி குமரன் சுவாமி தலைமையில் அதன் இந்திய நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை சத்ரபூரில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தினர்.
கஞ்சம் கலெக்டர் திப்யா ஜோதி பரிதா, முதலீட்டாளர்களுக்கு யூனிட் அமைப்பதற்கான அனைத்து வசதிகளையும் உறுதி செய்துள்ளார். டெபாதுத் சிங்டியோ இதுகுறித்து கூறும்போது, "டாடாவின் தொழில் பூங்கா மற்றும் சில தனியார் நிலங்களை நாங்கள் பார்வையிட்டுள்ளோம். முன்மொழியப்பட்ட செமிகண்டக்டர் யூனிட்டை நிறுவுவதற்காக, நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு மாவட்டத்திற்கு வந்து, அந்த இடத்தை இறுதி செய்யும்" என கூறினார்.
யூனிட்டை நிறுவ நிறுவனத்திற்கு 800 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிறுவனத்தின் அதிகாரிகள் வேறு சில மாவட்டங்களுக்கும் சென்றிருந்தாலும், கோபால்பூர் துறைமுகம், பிரத்யேக தொழில்துறை மையம், விமான ஓடுபாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு அருகாமையில் இருப்பதால், சுத்தமான நீர் மற்றும் எரிசக்தி கிடைப்பது தவிர, சத்ராபூருக்கு அருகிலுள்ள தளத்தை அவர்கள் விரும்பினர்.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு
தொடர்ந்து பேசிய சிங்டியோ, "இரண்டு ஆண்டுகளுக்குள் யூனிட்டை நிறுவி, 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் சுமார் ₹ 2 லட்சம் கோடி முதலீடு செய்து அடுத்த கட்டங்களில் யூனிட்டை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது" என்று கூறினார்.
செமிகண்டக்டர் யூனிட் மொபைல் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஏடிஎம்களில் பயன்படுத்தப்படும் மெமரி சிப்களை உருவாக்கும். செமிகண்டக்டர்கள் தயாரிப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி செமிகண்டக்டர்களை இறக்குமதி செய்கிறது இந்தியா.
"இந்தத் திட்டம் மாவட்டத்தில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும்" என்று பெர்ஹாம்பூர் எம்பி சந்திர சேகர் சாஹு கூறினார். கவர்ச்சிகரமான தொழில்துறை கொள்கையின் காரணமாக, பல நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.