Published : Dec 10, 2023, 07:20 AM ISTUpdated : Dec 10, 2023, 11:31 PM IST

Tamil News Live Updates: தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைப்பு!

சுருக்கம்

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Tamil News Live Updates:  தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைப்பு!

11:31 PM (IST) Dec 10

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழப்பு... தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில் தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10:58 PM (IST) Dec 10

மிக்ஜாம் புயல் பாதிப்பு: அமைச்சர் உதயநிதியிடம் 10 லட்சம் நிவாரண நிதியை வழங்கிய சிவகார்த்திகேயன்..

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 10 லட்ச ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கி உள்ளார்.

10:35 PM (IST) Dec 10

iPhone 15 : யாரும் நம்ப முடியாத தள்ளுபடி.. ஐபோன் 15 கம்மி விலைக்கு விற்பனையாகிறது.. எப்படி?

ஐபோன் 15, குரோமாவில் ரூ. 8,000 தள்ளுபடி பெறுகிறது. ஆப்பிள் ஐபோன் 15 எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்.

09:03 PM (IST) Dec 10

இனி யுபிஐ மூலம் இவ்வவளவு பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.. எவ்வளவு தெரியுமா?

இப்போது நீங்கள் யுபிஐ மூலம் இத்தனை லட்சத்துக்கும் மேல் செலுத்தலாம். இதுபற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

08:38 PM (IST) Dec 10

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் தாய்லாந்து டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது  இந்திய ரயில்வே. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

07:49 PM (IST) Dec 10

2026ல் நான் தான் சி.எம்.. பாஜகவுடன் இணையும் சரத்குமார்? அவரே கொடுத்த ஷாக்! பரபர பின்னணி

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்கு  இலக்கு அல்ல. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதலமைச்சராக ஆவேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

07:12 PM (IST) Dec 10

ரெட்மி பேட் முதல் ஒன்பிளஸ் டேப்லெட் வரை.. கம்மி பட்ஜெட்டில் டேப்லெட்டுகளை வாங்க அருமையான வாய்ப்பு

Xiaomi, Realme மற்றும் OnePlus மாடல்களில் பல்வேறு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டேப்லெட்டை வாங்க வேண்டும் என்பவர்களுக்கான செய்தி இது.

06:40 PM (IST) Dec 10

பக்காவான மைலேஜ் தரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

06:09 PM (IST) Dec 10

குறைந்த விலையில் கோவாவை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் விலை எவ்வளவு?

குறைந்த விலையில் கோவா டூர் பேக்கேஜ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

05:00 PM (IST) Dec 10

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இதை செய்து முடிக்கணும்.. இல்லைனா ரூ. 5000 அபராதம்.. எதற்கு தெரியுமா?

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்கவில்லை என்றால் வரி செலுத்துவோர் ரூ. 5000 அபராதம் செலுத்த வேண்டும். இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

04:10 PM (IST) Dec 10

கேசிஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த்!

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அம்மாநில முதல்வர் ரேவந்த் நலம் விசாரித்துள்ளார்

 

03:47 PM (IST) Dec 10

குடித்து விட்டு குருத்வாரா; நிர்வாண வீடியோ - பஞ்சாப் முதல்வர் மீது மகள், முன்னாள் மனைவி குற்றச்சாட்டு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மீது அவரது மகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

 

03:13 PM (IST) Dec 10

மாயாவதியின் அரசியல் வாரிசு: யார் இந்த ஆகாஷ் ஆனந்த்?

மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார்

 

01:39 PM (IST) Dec 10

தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைப்பு!

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

01:21 PM (IST) Dec 10

மிக்ஜாம் புயல்: பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை!

மிக்ஜாம் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரவுள்ளது.
 

01:11 PM (IST) Dec 10

முதல்வரே கடிதம் எழுதுவதால் எந்த பயனும் இல்லை! இலங்கையின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்! அன்புமணி!

நாகை, காரைக்கால் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் 25 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

01:09 PM (IST) Dec 10

மிக்ஜாம் புயல்: நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

12:33 PM (IST) Dec 10

மழை வெள்ள பாதிப்பு நிதி: ஒரு வாரத்தில் டோக்கன் - உதயநிதி சொன்ன தகவல்!

முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

11:56 AM (IST) Dec 10

மழை வெள்ள பாதிப்பு நிதி.. ஒரு வாரத்தில் டோக்கன்.. உதயநிதி தகவல்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத்தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். 

11:12 AM (IST) Dec 10

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை: மத்திய அரசு பதில்!

பாலஸ்தீனக் கொள்கையில் மாற்றமில்லை என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

 

11:04 AM (IST) Dec 10

லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல்.. குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!

லாரி மீது  கார் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10:12 AM (IST) Dec 10

பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் தந்தை மரணம்!

பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் அவருக்கு நீதி கிடைத்த 2 வாரங்களில் அவரது தந்தை காலமானார்

 

09:16 AM (IST) Dec 10

Today Gold Rate in Chennai : நேற்று ஒரே நாளில் 560 ரூபாய் குறைந்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

08:21 AM (IST) Dec 10

Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பொளந்து கட்டப்போகுதாம் மழை.!

தமிழகத்தில் கடலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

08:07 AM (IST) Dec 10

இந்த நாடு என்ன அதானியோடதா? இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.. பாஜகவுக்கு எதிராக சீறும் சீமான்.!

பாசிசப் போக்கிற்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களின் குரல்களை எல்லாம் படுகொலைகள் மூலம்  நிரந்தரமாக நிறுத்தியவர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் குரல்வளையையும் நெரிக்க தொடங்கியுள்ளது வெட்கக்கேடானது என சீமான் கூறியுள்ளார். 

07:21 AM (IST) Dec 10

எடுபிடி பழனிசாமி.. இனி ஒரு வார்த்தை பேசினாலும் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.. மநீம ஆவேசம் எச்சரிக்கை!

மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடுபிடி தலைவர், களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.


More Trending News