மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சதீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ந்தேதி வாக்குபதிவு நடைபெறும். சதீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குபதிவு. தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ந் தேதி வாக்கு பதிவு. ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ந் தேதியும், மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ந் தேதியும் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.. டிசம்பர் 3-ந்தேதி அனைத்து மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

10:10 PM (IST) Oct 09
ஆப்பிள் ஐபோன் 12 மிக குறைந்த விலையில், அதாவது தற்போது ரூ.16,399க்கு கிடைக்கிறது. குறைந்த விலையில் எப்படி வாங்குவது என்பதை இங்கே காணலாம்.
09:43 PM (IST) Oct 09
சுகன்யா சும்ரிதி யோஜனா திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 177 முதலீட்டில் ரூ. 30 லட்சத்தை பெறலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
09:25 PM (IST) Oct 09
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
09:09 PM (IST) Oct 09
சம்பள சீட்டில் காட்டப்படும் PF தொகை உங்கள் PF கணக்கிற்கு வரவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே பார்க்கலாம்.
08:06 PM (IST) Oct 09
எஸ்பிஐ மேக்னம் குழந்தைகள் நல நிதியில், உங்கள் குழந்தைகளுக்கான சேமிப்பை சேர்க்கலாம். இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
07:45 PM (IST) Oct 09
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
07:28 PM (IST) Oct 09
தற்போது பல்வேறு வகையான ஓடிடி தளங்கள் உள்ளது. இதற்கு தனி கட்டணமும், மொபைல் இன்டர்நெட்டுக்கு தனி கட்டணமும் பலரும் செலுத்துகின்றனர்.
06:16 PM (IST) Oct 09
காசா மீது முழு முற்றுகையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
05:15 PM (IST) Oct 09
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்காக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது
04:52 PM (IST) Oct 09
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
04:03 PM (IST) Oct 09
ரத்தக்கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
03:40 PM (IST) Oct 09
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் எப்போது நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்
03:34 PM (IST) Oct 09
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்-ஐ நடிகர் விஜய் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
03:15 PM (IST) Oct 09
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் பைனல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
03:15 PM (IST) Oct 09
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நாளை மறுநாள் வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
02:13 PM (IST) Oct 09
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்களின் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்
01:50 PM (IST) Oct 09
தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களிலும் சிலிண்டர் இணைப்பு உள்ளது என்ற மத்திய அரசின் கூற்றை தமிழக அரசு மறுத்துள்ளது
01:34 PM (IST) Oct 09
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
01:20 PM (IST) Oct 09
லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு டப்பிங் பேச பாடகி சின்மயிக்கு வாய்ப்பளித்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.
12:24 PM (IST) Oct 09
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களிலும் 16 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், தேர்தலை முன்னிட்டு இந்த ஐந்து மாநிலங்களிலும் 177 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். "40 நாட்களில் நாங்கள் 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
12:21 PM (IST) Oct 09
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசிவருகிறார்.
11:57 AM (IST) Oct 09
விபத்தில் பலியான ஒருவரது உடலை கால்வாயில் வீசிய பீகார் போலீஸ்காரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
11:22 AM (IST) Oct 09
ஐந்து மாநிலத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது
11:08 AM (IST) Oct 09
பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறி உள்ளார்
10:42 AM (IST) Oct 09
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா தொடர்பான எக்ஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
10:31 AM (IST) Oct 09
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய உள்ளார்களா என்கிற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருவரின் இன்ஸ்டா போஸ்ட் அமைந்துள்ளது.
09:23 AM (IST) Oct 09
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள எழுத்தாளர் பவா செல்லதுரை மீது கவிஞர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
09:10 AM (IST) Oct 09
தமிழகத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் இன்று முதல் நிறுத்தப்படுகிறது இதனிடையே கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் 7973 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
08:42 AM (IST) Oct 09
தொடர்ச்சியாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான்-னின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
07:59 AM (IST) Oct 09
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டுள்ளார்.
07:19 AM (IST) Oct 09
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது, நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
07:18 AM (IST) Oct 09
மின்பாதை பராமரிப்புகாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.
07:18 AM (IST) Oct 09
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, காவிரி விவகாரம், ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி வெளிநடப்பு செய்ய அதிமுக திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கவும் ஆளுங்கட்சியான திமுகவும் தயார் நிலையில் உள்ளது.