Asianet News TamilAsianet News Tamil

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது

BJP releases list of candidates for madhyapradesh rajasthan and Chhattisgarh smp
Author
First Published Oct 9, 2023, 5:13 PM IST | Last Updated Oct 9, 2023, 5:14 PM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானின் நவம்பர் 23ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில், கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு  கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்!

 

 

ராஜஸ்தான் மாநில பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 41 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். தியா குமாரி வித்யாதார் நகரிலும், பாபா பாலக்நாத் திஜாராவிலும், ஹன்ஸ்ராஜ் மீனா சபோத்ராவிலும், கிரோடி லால் மீனா சவாய் மாதோபூரிலும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களுக்கன அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.

 

 

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புத்னியிலும், மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா டாடியாவிலும், கோபால் பார்கவா ரெஹ்லியிலும், விஸ்வாஸ் சாரங் நரேலாவிலும், துளசிராம் சிலாவத் சான்வேரிலும் போட்டியிடுகின்றனர்.

 

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 64 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அம்மாநில பாஜக தலைவர் அருண் சாவ் லார்மில் போட்டியிடுகிறார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios