MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சட்டப்பேரவை கூட்டத்தில் அமளியை கிளப்ப தயாராகும் அதிமுக, பாஜக.? பதிலடி கொடுக்க காத்திருக்கும் திமுக

சட்டப்பேரவை கூட்டத்தில் அமளியை கிளப்ப தயாராகும் அதிமுக, பாஜக.? பதிலடி கொடுக்க காத்திருக்கும் திமுக

தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, காவிரி விவகாரம், ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி வெளிநடப்பு செய்ய அதிமுக திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கவும் ஆளுங்கட்சியான திமுகவும் தயார் நிலையில் உள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 09 2023, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் நடைபெற்றது.  கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி(இன்று)  சட்டப்பேரவை கூடுவதாக தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அனல் பறக்கும் சட்டப்பேரவை கூட்ட தொடர்

அதன் அடிப்படையில் ன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியில் கடந்த 6 மாத காலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35

காவிரி பிரச்சனை- அமளி கிளப்பும் எதிர்கட்சிகள்

தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருப்பதாகவும்  அதிமுக, பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் உரிய முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தராத காரணத்தால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக, பாஜக பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

45

ஓபிஎஸக்கு இருக்கை ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எனவே சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை இருக்கை ஒதுக்கீட்டில் சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.
 

55

வெளிநடப்பு செய்ய காத்திருக்கும் எதிர்கட்சிகள்

எனவே வழக்கம் போல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்க்கு அருகருகே இருக்கையானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக- பாஜக பிரிந்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து செயல்படுமா.? அல்லது அரசுக்கு எதிராக தனித்தனியாக பிரச்சனை எழுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திமுக
அரசியல்
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Recommended image2
Astrology: நல்ல காலம் பொறந்தாச்சு.! 6 நட்சத்திரங்களுக்கு இனி அற்புத யோகம்.! தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்.!
Recommended image3
Mullaperiyar Dam: முல்லைப்பெரியாறு அணை திறப்பு! தமிழகத்திற்கு வருகிறது தண்ணீர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved