சமந்தாவோடு மீண்டும் இணைகிறாரா நாக சைதன்யா? ஒரே ஒரு போட்டோவால் ஹாப்பியான ரசிகர்கள்
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய உள்ளார்களா என்கிற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருவரின் இன்ஸ்டா போஸ்ட் அமைந்துள்ளது.
naga chaitanya, samantha
நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக இருவருமே ஒன்றாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்கள் என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்து பிரிந்தார்கள் என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.
naga chaitanya, samantha divorce
விவாகரத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் செம்ம பிசியாகிவிட்டனர். குறிப்பாக இருவருமே பாலிவுட்டில் அறிமுகமாகினர். நாக சைதன்யா அமீர் கானின் லால் சிங் சத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதேபோல் நடிகை சமந்தா, தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடர் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். தற்போது பாலிவுட்டில் அவர் நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் உருவாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
naga chaitanya, samantha patch up
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை மீண்டும் தன் இன்ஸ்டாகிராம் பதிவில் அன் ஆர்சிவ் செய்திருந்தார்.
naga chaitanya and naga chaitanya with hash
தற்போது நடிகர் நாக சைதன்யா அதற்கு ஒருபடி மேலே போய், நடிகை சமந்தாவின் செல்ல நாய்க்குட்டியுடன் ஜாலியாக காரில் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தாவிடம் இருந்த அந்த நாய்க்குட்டி தற்போது நாக சைதன்யாவிடம் உள்ளதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பவா செல்லதுரை நிஜத்தில் இப்படி ஒரு திருட்டு வேலை பார்த்துள்ளாரா? கவிஞர் மூலம் அம்பலமான உண்மை