Asianet News TamilAsianet News Tamil

அன்புமணி ராமதாஸுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன விஜய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை நடிகர் விஜய் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Thalapathy vijay wishes PMK leader Anbumani Ramadoss gan
Author
First Published Oct 9, 2023, 3:33 PM IST | Last Updated Oct 9, 2023, 3:33 PM IST

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளையும் அவர் முழுவீச்சில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் பரிசு வழங்கினார். அப்போது அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளும் இருந்தன. ஏழை மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலை அமைத்துக் கொடுத்த விஜய், தொடர்ந்து தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுவதால் அதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அரசியலில் நுழைய உள்ள நிலையில், நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு தானே போன் போட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார். அண்மையில் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அன்புமணி ராமதாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட விஜய் அவருக்கு தன் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இது தான் ஜெயிலர் படத்தோட பைனல் கலெக்‌ஷன்... லியோவுக்கு டார்கெட் செட் பண்ணிய ரஜினி - முறியடிப்பாரா விஜய்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios