ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

03:08 PM (IST) Nov 09
தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
01:33 PM (IST) Nov 09
டிசம்பர் மாதம் வெளியாக இருந்த கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
12:45 PM (IST) Nov 09
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஷூ, நிக்சன் இருவரும் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷூவின் தாய் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
11:38 AM (IST) Nov 09
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10:08 AM (IST) Nov 09
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்துக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
09:34 AM (IST) Nov 09
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் காரசாரமாக விவாதம் நடத்திய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
08:48 AM (IST) Nov 09
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
08:38 AM (IST) Nov 09
ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
07:39 AM (IST) Nov 09
பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தாம்பரம் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
07:05 AM (IST) Nov 09
தொடர் கனமழை காரணமாக மதுரை, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
07:05 AM (IST) Nov 09
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெசன்ட் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.