தீபாவளி ரேஸில் ஜெயிக்கணும் கடவுளே... திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு
தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
Raghava Lawrence
பீட்சா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விக்ரம் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றி டாப் இயக்குனராக வலம் வந்துகொண்டிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது ஜிகர்தண்டா தான். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது.
jigarthanda Double X poster
தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
jigarthanda Double X team in Tirupati
ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அப்படக்குழுவினர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். ராகவா லாரன்ஸ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருடன் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Raghava Lawrence tirupati visit
திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினரை பார்த்ததும் ரசிகர்கள் அவர்களோடு ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் அவர் திருப்பதிக்கு வரவில்லை. இப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழுவினர் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்கள்... பான் இந்தியா ஸ்டார்ஸுக்கு பயந்து பரம எதிரியிடம் பலத்தை காட்டப்போகிறாரா தனுஷ்? கேலிக்குள்ளான கேப்டன் மில்லர்!