பான் இந்தியா ஸ்டார்ஸுக்கு பயந்து பரம எதிரியிடம் பலத்தை காட்டப்போகிறாரா தனுஷ்? கேலிக்குள்ளான கேப்டன் மில்லர்!
டிசம்பர் மாதம் வெளியாக இருந்த கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளதை சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
Captain Miller
நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஷிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், விநாயகன், சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
Dhanush
வரலாற்று கதையம்சம் கொண்டா கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் போராளியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. ஆனால் நேற்று திடீரென இப்படத்தை பொங்கலுக்கு தள்ளிவைப்பதாக புது போஸ்டருடன் அறிவிப்பு ஒன்று வெளியானது. இதனால் ரசிகர்கள் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Blue sattai maaran trolls captain miller
கேப்டன் மில்லர் படம் தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கேப்டன் மில்லர் படம் தள்ளிவைக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள பிரபாஸின் சலார் மற்றும் ஷாருக்கானின் டுங்கி படங்களுக்கு பயந்து பொங்கலுக்கு தாவினாரா அல்லது பரம எதிரியான சிவகார்த்திகேயனின் அயலானுக்கு பொங்கல் வைக்க வருகிறாரா என கேலி செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
blue sattai maaran about dhanush
அதேபோல் மற்றொரு பதிவில் நீண்ட தாடியுடன் இருக்கும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் பட ஸ்டில் ஒன்றை பதிவிட்டு லோ பட்ஜெட் யாஷ் என கிண்டலடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி “2024 பொங்கலுக்கு கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாகிறது. இதன் ப்ரீக்வெல் மற்றும் சீக்வல் ஆகியவை பார்ட் 1 மற்றும் பார்ட் 3 ஆக அடுத்தடுத்து வெளியாகும்” என இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேட்டியில் கூறியதையும் மீம் போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை.
இதையும் படியுங்கள்... மாயாவால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை; அவ ஒரு லெஸ்பியன்.. பிரபல பாடகி பகீர் குற்றச்சாட்டு